பெரியாரைத் தெரியுமா?

பெரியாரைத் தெரியுமா? - தொகுப்பாசிரியர்: உ.நீலன்; பக். 508; ரூ.300; அருள் பதிப்பகம், சென்னை-15; 044 - 2435 5052.

பெரியாரைத் தெரியுமா? - தொகுப்பாசிரியர்: உ.நீலன்; பக். 508; ரூ.300; அருள் பதிப்பகம், சென்னை-15; 044 - 2435 5052.
நூலின் தலைப்புக்கேற்ப பெரியாரின் வாழ்க்கை, பழக்க, வழக்கங்கள், அணுகுமுறைகள், கருத்துகள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள உதவும்விதமாக இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
பலரும் அறியாத வித்தியாசமான தகவல்கள், கருத்துகள் இந்நூலில் நிரம்பியிருக்கின்றன. உதாரணமாகச் சிலவற்றைச் சொல்லலாம்.
"கலப்பு மணம் செய்வதால் சாதி ஒழிந்து போகும் என்று சொல்ல எனக்குத் தைரியம் இல்லை. அதையே ஒரு சாதியாக ஆக்கிவிடுவார்கள் ' என்று பெரியார் எழுதியது,
"தமிழில் நம் வளர்ச்சிக்குரிய, ஆராய்ச்சிக்குரிய என்ன நல்ல புத்தகங்கள் இருக்கின்றன? எல்லா தமிழ்ப் புத்தகங்களையும் படித்துவிட்டேன். அவைகளில் ஒன்றுமே நம் வாழ்விற்குப் பயன்படக் கூடியது இல்லை' என்று மறைமலையடிகள் பெரியாரிடம் கூறியது,
"தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் தனித்தனி மொழிகளென்றோ, அல்லது தமிழ் தவிர மற்ற மூன்றும் தமிழில் இருந்து பிரிந்த மொழிகளென்றோ தோன்றவில்லை.
ஒரே மொழி அதாவது தமிழ்தான் நான்கு இடங்களில் நான்கு விதமாகப் பேசப்பட்டு வருகிறது என்றே நான் அபிப்பிராயப்படுகிறேன்' என்று பெரியார் எழுதியது,
"இது சமயத்தில் பொது மக்களுக்கு ஒரு வார்த்தை. அறிவியக்க நூல்கள், சீர்திருத்த நூல்கள் என்றால் ஒவ்வொன்றையும் வாங்கி வீட்டில் நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டுமென்பது அர்த்தமல்ல. வாங்கிப் படித்துவிட்டு படித்து முடித்தவுடன் முக்கால் விலைக்கு அரை விலைக்கு விற்றுவிட வேண்டும். மறுபடி வேறு வாங்க வேண்டும் ' என்று பெரியார் கூறியது ஆகிவற்றைச் சொல்லலாம். பெரியார் வாழ்ந்த காலத்தின் அரசியல், சமூகச் சூழ்நிலைகளைத் தெரிந்து கொள்ள இந்நூல் பயன்படும் என்பதில் ஐயமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com