இசை மகா சமுத்திரம் விளாத்திகுளம் சுவாமிகள்

இசை மகா சமுத்திரம் விளாத்திகுளம் சுவாமிகள் - தொகுப்பாசிரியர்: என்.ஏ.எஸ். சிவகுமார்; பக்.160; ரூ.150; காவ்யா, சென்னை-24; )044- 2372 6882.

இசை மகா சமுத்திரம் விளாத்திகுளம் சுவாமிகள் - தொகுப்பாசிரியர்: என்.ஏ.எஸ். சிவகுமார்; பக்.160; ரூ.150; காவ்யா, சென்னை-24; )044- 2372 6882.
விளாத்திகுளம் சுவாமிகள்(நல்லப்பசாமி பாண்டியன்) ராகங்களை அதன் அசலாகவும், வித்தியாசப்படுத்தியும் பாடுவதில் வல்லவர். 72 மேள கர்த்தாக்களையும் அறிந்தவர். புன்னாகவராளி ராகத்தை மிகச் சிறப்பாகப் பாடுபவர்.
நாகஸ்வர வித்வான் காருகுறிச்சி அருணாசலத்துடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார். விளாத்திகுளம் வட்டாரத்தில் எந்த இடத்தில் காருகுறிச்சியார் கச்சேரி செய்தாலும், சுவாமிகளை அமர வைத்து, அவரை வணங்கி, அவருடைய ஆசியைப் பெற்ற பின்னரே கச்சேரியைத் தொடங்குவார் என்பதை இந்த நூலின் வழியாக அறிய முடிகிறது.
பாரதியின் பாடலை கம்பீரமாகப் பாடிய இந்த இசைஞானி, அதிகம் வெளியில் பிரபலமாகாதவர். குருவின் வாடையே அறியாமலேயே, மேடையேறி பாடாமலேயே இசையறிஞர்களால் "மாமேதை' என்று பாராட்டப்பட்டவர் என்று விளாத்திகுளம் சுவாமிகளை கட்டுரையாளர்கள் புகழ்ந்துரைக்கின்றனர்.
இந்த நூலில் ரசிகமணி, கு.அழகிரிசாமி கடிதங்கள். கி.ராஜநாராயணன், பா.வேலப்பன் உள்ளிட்டோரின் கட்டுரைகள், தினமணி நாளிதழில் வெளிவந்த செய்தித் தொகுப்பு என 20 தலைப்புகளில் சுவாமிகளைக் குறித்த குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. விசில் மூலமாகவும் ராகங்களை இசைக்கும் ஆற்றல் பெற்ற அபூர்வக் கலைஞரை வாசகர்கள் அறிந்து கொள்ள இந்த நூல் உதவும். சுவாமிகள் குறித்த பல அற்புத தகவல்களைத் திரட்டித் தந்துள்ள தொகுப்பாசிரியர் முயற்சி பாராட்டத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com