50 + இளமையோடு இருப்பது எப்படி?

50 + இளமையோடு இருப்பது எப்படி? - டாக்டர் சு.நரேந்திரன்; பக். 264; ரூ.190 ; கற்பகம் புத்தகாலயம், சென்னை-17 ; 044 -- 2431 4347.
50 + இளமையோடு இருப்பது எப்படி?

50 + இளமையோடு இருப்பது எப்படி? - டாக்டர் சு.நரேந்திரன்; பக். 264; ரூ.190 ;
 கற்பகம் புத்தகாலயம், சென்னை-17 ; 044 -- 2431 4347.
 வயதானாலும் இளமையாக இருக்கவே எல்லாரும் விரும்புகிறார்கள். இந்நூலில் ஐம்பது வயதைக் கடந்தவர்கள் இளமையாக வாழ வழி சொல்லப்பட்டுள்ளது. வயதானவர்களுக்கு வரக் கூடிய ரத்த அழுத்தம், மாரடைப்பு, எலும்புகள் பலவீனமடைதல், மூட்டுகளில் பாதிப்பு, ஜீரணக் கோளாறுகள், பற்கள், கண்களில் பாதிப்பு உட்பட பல நோய்களுக்கான காரணங்களையும் அதற்கான தடுப்புமுறைகளையும் இந்நூல் விரிவாக விளக்குகிறது.
 எவற்றை உண்ண வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும்? என்னவிதமான உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்? உடல் எடை அதிகமாகாமல் எப்படிச் சமாளிப்பது? மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க செய்ய வேண்டியவை எவை? என வயதானவர்களின் மன நலம், உடல் நலம் தொடர்பான அனைத்து விஷயங்களும் மிக எளிமையாக, தெளிவாக இந்நூலில் கூறப்பட்டுள்ளன.
 "சுறுசுறுப்பால் உடல் தகுதியுடைய 70 வயது முதியவர்கள், 30 வயது இளைஞரின் உடல் தகுதியைப் பெற்றிருப்பர்' என்கிறார் நூலாசிரியர். அத்தகைய உடல் தகுதியை முதியவர்கள் பெற வழிகாட்டும் சிறந்த நூல் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com