நிழல் படம் நிஜப் படம்

நிழல் படம் நிஜப் படம் - யுகன்; பக். 167; ரூ. 300; நற்றிணை பதிப்பகம், 6/84, மல்லன் பொன்னப்பன் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை - 600 005 .
நிழல் படம் நிஜப் படம்

நிழல் படம் நிஜப் படம் - யுகன்; பக். 167; ரூ. 300; நற்றிணை பதிப்பகம், 6/84, மல்லன் பொன்னப்பன் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை - 600 005 .
திரைப்பட ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட அரசியல் படங்களில் (கட்சி அரசியல் அல்ல) இருபத்தேழு படங்களைத் தேர்ந்தெடுத்து அவை பற்றி விரிவாக எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
இத்தொகுப்பில் பெரும்பாலும் ஆங்கிலப் படங்களும், சில இந்திப் படங்களும், மிகக் குறைவான மலையாளப் படங்களும் இடம்பெற்றுள்ளன. (தமிழில் ஒன்றுகூடவா இல்லை?)
தென்னாப்பிரிக்காவில் கறுப்பின மக்களுக்காகப் போராடி அவர்களுக்கு விடுதலை பெற்றுத் தந்த நெல்சன் மண்டேலாவைப் பற்றிய "மண்டேலா - லாங் வாக் டு ஃப்ரீடம்' படத்தில் தொடங்கி, "கிரேட் டிக்டேட்டர்', "லெமன் ட்ரீ', "பீப்பிலி லைவ்' , "காந்தி மை ஃபாதர்', "குயின்', "தி அயன் லேடி', "லிங்கன்' போன்ற புகழ்பெற்ற படங்களுடன் அதிகம் அறியப்படாத படங்களைப் பற்றிய கட்டுரைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
படத்தைப் பற்றிய அறிமுகமாக மட்டும் இல்லாமல், ஒவ்வொரு படத்தைப் பற்றியும் அதிகம் அறியப்படாத பல செய்திகளையும் தந்திருப்பது சிறப்பு. உதாரணமாக, ஹிட்லரின் கொல்லப்பட வேண்டியவர்கள் பட்டியலில் சார்லி சாப்ளின் பெயரும் இருந்தது, வடகொரிய அதிபரைக் கேலி செய்து எடுக்கப்பட்ட "தி இன்டர்வியூ' படத்தைத் தயாரித்த சோனி நிறுவனம் முடக்கப்பட்டது - இப்படி பல.
அரசியல் படங்கள் என்று கூறப்பட்டாலும் தனிமனித உணர்வுகளையும் சமூக அவலங்களையும் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறது, ஒவ்வொரு படமும். குறிப்பாக ஒரு விதவைப் பெண் சிறுவயது முதல் ஆசையாக வளர்த்து வரும் எலுமிச்சைத் தோட்டம். அந்த இடத்திற்கு அருகில் ஓர் அமைச்சர் குடியேறுவதால் வெட்டப்பட வேண்டிய சூழலில் அப் பெண்ணின் மன உணர்வுகளைக் கூறும் "லெமன் ட்ரீ', விவசாயிகளின் தற்கொலை பற்றிப் பேசும் "பீப்லி லைவ்', முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த போபால் விஷவாயு கசிவு கோர விபத்தைச் சொல்லும் "போபால்: எ பிரேயர் ஃபார் ரெயின்' - போன்ற படங்களைப் பற்றிய கட்டுரைகள் அருமை. வழவழப்பான வண்ணப்படங்கள் நூலை மேலும் அழகாக்குகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com