கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்

கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்- பனிப்போர் முதல் இன்று வரை- நந்திதா ஹக்ஸர் - தமிழில்; செ. நடேசன்; பக். 452; ரூ. 380; எதிர் வெளியீடு, 90, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி- 642002.
கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்

கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்- பனிப்போர் முதல் இன்று வரை- நந்திதா ஹக்ஸர் - தமிழில்; செ. நடேசன்; பக். 452; ரூ. 380; எதிர் வெளியீடு, 90, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி- 642002.
காஷ்மீர் பிரச்னை பற்றி பொதுத் தளத்தில் கூறப்படும் காரணங்களுக்கும், விளக்கங்களுக்கும் மத்தியில், இந்த நூல் வித்தியாசமான அணுகுமுறையுடன் வெளிவந்திருக்கிறது. தமிழிலேயே எழுதப்பட்ட நூல் என்று சொல்லும் அளவுக்கு மொழிபெயர்ப்பு சிறப்பாக உள்ளது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறும் போராட்டங்கள், வெறுமனே இஸ்லாமியர்களின் வெறித்தனம் என கட்டமைக்கப்பட்டுள்ள பொது வெளிக்கு, அது காஷ்மீரி தேசிய இனத்தின் விடுதலைக் குரல் என விவரித்துப் படர்கிறது இந்த நூல்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் அரசு ஊழியர் சங்கத் தலைவரும், அகில இந்திய மாநில அரசுப் பணியாளர் சங்கத்தின் வடக்கு மண்டலச் செயலருமான சம்பத் பிரகாஷ், நாடாளுமன்றத் தாக்குதலுக்கு மூளையாக இருந்தவர் என்ற குற்றச்சாட்டில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குரு ஆகியோர் இந் நூலின் பிரதான கதாபாத்திரங்கள்.
இவர்கள் இருவரின் பிறப்பு தொடங்கி தற்போதுள்ள நிலை வரை இந் நூலில் பதிவு செய்திருக்கிறார் ஹக்ஸர். இரு நபர்களின் வாழ்க்கைக்கு நடுவே, காஷ்மீரின் சுயநிர்ணய உரிமைப் போரை- இந்திய விடுதலைக்கு முன்பிருந்தே- விளக்குவது அத்தனை சுலபமல்ல. சம்பத் பிரகாஷின் தலைமறைவு வாழ்க்கை, அத்தோடு இணைந்திருந்த தொழிற்சங்கப் பணிகள் படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கின்றன.
காஷ்மீரியில் எழுதப்பட்ட கவிதைகளும், அவற்றுக்கான தமிழ்ப் பெயர்ப்புகளும் அருமை. மிக முக்கியமான தேசிய இனப் பிரச்னையை எளிமையாகப் புரியும் நூலாகக் கொண்டு வந்திருக்கின்றனர். வாசிப்பை நேசிக்கும் அனைவரும் படிக்க வேண்டிய நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com