இலக்கியச் சங்கமம்

ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் நடத்தும் உலகக்கவிதை நாள் விழா - தமிழ்க் கவிதை சிறப்புரை. பங்கேற்பு: சுதா முருகேசன், உமையாள் முத்து; ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு, 24/223, என்.எஸ்.சி.போசு சாலை, சென்னை; 21.3.17 மால

ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் நடத்தும் உலகக்கவிதை நாள் விழா - தமிழ்க் கவிதை சிறப்புரை. பங்கேற்பு: சுதா முருகேசன், உமையாள் முத்து; ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு, 24/223, என்.எஸ்.சி.போசு சாலை, சென்னை; 21.3.17 மாலை 6.00.

எழுத்து வேந்தர் கலைமாமணி டி.என்.சுகி சுப்பிரமணியன் நூற்றாண்டு விழா மற்றும் சுகி நூற்றாண்டு விருதுகள் வழங்கும் விழா. தலைமை: தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்; பங்கேற்பு: முக்தா வி.சீனிவாசன், ஜ.ரா.சுந்தரேசன், அகிலா சிவராமன், எஸ்.பி.பாலகிருஷ்ணன், நாகூர் ரூமி, சுகி சிவம், எம்.எஸ்.பெருமாள்; பாரதிய வித்யா பவன் அரங்கம், கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர், சென்னை; 22.3.17 மாலை 6.00.

தமிழ்ப் பல்கலைக்கழகம் இலக்கியத்துறை - தமிழர்தந்தை சி.பா.ஆதித்தனார் அறக்கட்டளை நடத்தும் "சமூக மாற்றத்தில் ஊடகங்களின் பங்களிப்பு' சிறப்புக் கருத்தரங்கம்.தலைமை: க.பாஸ்கரன்; பங்கேற்பு: பிரபஞ்சன், இரா.காமராசு, ச.முத்துக்குமார், க.திலகவதி, சுப்ரா நடராசன், பாமரன், இரா.குறிஞ்சிவேந்தன்; பேரவைக் கூடம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்; 23.3.17 காலை 10.00.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், விவேகானந்தா கல்லூரி தமிழ் உயராய்வு மையம் இணைந்து நடத்தும் செம்மொழிக் கருத்தரங்கம். 22.3.17 பங்கேற்பு: பெ.மாலரசு, ஈ.பொன்னுலிங்கம், முகிலை.இராசபாண்டியன், கோ.சங்கரவீரபத்திரன், ந.நீலமோகன், ந.அய்யப்பன்; 23.3.17 பங்கேற்பு: சு.சதாசிவம், இரா.சிவசங்கரி, ந.கிருஷ்ணன், தா.நீலகண்டபிள்ளை; 24.3.17 பங்கேற்பு: சு.ஜெயக்குமாரி, தி.மரிய ஜுலியட் ; ஒவ்வொரு நாளும் காலை 10.00 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடக்கம்; விவேகானந்தா கல்லூரி, அகஸ்தீஸ்வரம்.

கவிதைச் சிறகுகள் நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி. தலைமை: ந.இராமன்; பங்கேற்பு: திருவை பாபு, வேளாண்கண்ணி பொன்னிவளவன்; இராமன் அரங்கம், 120, என்.டி.ஆர். தெரு, ரங்கராஜபுரம், சென்னை-24; 25.3.17 மாலை 5.30. 

போதி இலக்கியச் சந்திப்பு. தலைமை: அரச.முருகபாண்டியன்; பங்கேற்பு: அ.ஜெயச்செல்வி, தங்கமுனியாண்டி, வெண்ணிலவன், வேலு சதானந்தம், ரகுதேவன், சந்திமாவோ, குருசாமி மயில்வாகனன்; பாணர் குடில், 28, முதன்மைச் சாலை, பள்ளத்தூர், காரைக்குடி; 25.3.17 மாலை 5.00.

பாரதி, பாரதிதாசன் கவிதை அமைப்பு, கவிஞாயிறு தாராபாரதி அறக்கட்டளை இணைந்து நடத்தும் கவிஞாயிறு தாராபாரதி விழா. பங்கேற்பு: ஈரோடு தமிழன்பன், இராமகுருநாதன், செ.தட்சிணாமூர்த்தி, இராமமூர்த்தி, திருவை பாபு, நல்லாமூர் கோவி.பழனி; வியாபாரிகள் சங்க திருமண மண்டபம், மூவரசம்பேட்டை குளம் பின்புறம், மடிப்பாக்கம், சென்னை-91; 25.3.17 காலை 9.00.

சங்க இலக்கியப் பொதும்பர் நடத்தும் நாற்பெரும் விழா. தலைமை: மா.சற்குணம்; பங்கேற்பு: இரா.தமிழரசி, வி.க.பாலசுப்பிரமணியம், அனுசூயா டெய்சி ஏனஸ்ட், கலாவிசு உலகநாயகி பழனி, ச.தமிழரசு, சீ.விக்கிரமன்; தமிழாலயம், வீ.ஆர்.பி.மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம்; 26.3.17 காலை 10.00. 

திருவொற்றியூர் பாரதி பாசறை நடத்தும் திருப்புகழ் தொடர் சொற்பொழிவு. பங்கேற்பு: மா.கி.இரமணன்; ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருப்புகழ் பக்த ஜனசபை, 39/25, கிராமத்தெரு, திருவொற்றியூர், சென்னை-19; 26.3.17 காலை 10.00.

இலக்குவனார் இலக்கியப் பேரவை நடத்தும் தமிழ்நடைப் பேரவையின் பதின்ம ஆண்டு விழா, வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்வு. தலைமை: மு.பி.பாலசுப்பிரமணியன்; பங்கேற்பு: சுப.வீரபாண்டியன், செம்பை சேவியர், உ.தேவதாசு, இரா.மதிவாணன், விவேகானந்த கோபால், தி.பழநிச்சாமி, ஆ.நடராசன்; திருமால் திருமண மண்டபம், அம்பத்தூர், சென்னை-53; 26.3.17 மாலை 5.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com