சில கவிதைகள் சில கதைகள் சில கட்டுரைகள்

சில கவிதைகள் சில கதைகள் சில கட்டுரைகள் - அழகிய சிங்கர்; பக். 136; ரூ.100; விருட்சம், சென்னை - 33; )044 - 2421 0610.
சில கவிதைகள் சில கதைகள் சில கட்டுரைகள்

சில கவிதைகள் சில கதைகள் சில கட்டுரைகள் - அழகிய சிங்கர்; பக். 136; ரூ.100; விருட்சம், சென்னை - 33; )044 - 2421 0610.
எழுத்தாளர் அழகியசிங்கரின் 27 கவிதைகள், 8 சிறுகதைகள், 12 கட்டுரைகள் ஆகியவை அடங்கிய தொகுப்பு இது. பெரும்பாலான சிறுகதைகள் மிகவும் எளிமையாகவும் நேரடித்தன்மையுடனும் இருக்கின்றன. எழுத்தாளரான வங்கி அதிகாரி மீது வாடிக்கையாளர் ஒருவர் புகார் கொடுக்க, அதனால் அவருக்கு ஏற்படும் மன உளைச்சல்கள், திடீரென பணி நீக்கம் செய்யப்பட்ட வங்கி ஊழியர் ஒருவரை மீண்டும் பணியில் சேர்க்க முயற்சி செய்யும் வங்கி அதிகாரி முடிவில் தோல்வியடைவது - இப்படி பெரும்பாலான கதைக்களன் வங்கியாகவே இருப்பது சலிப்பூட்டுகிறது. மேலும் மாம்பலம், வங்கி அதிகாரி, 93 வயது அப்பா, அசோகமித்திரன், ராமகிருஷ்ணன் போன்ற மேற்கோள்கள் கதைத்தன்மையைக் குறைத்து கட்டுரைத்தன்மையைக் கூட்டி விடுகின்றன.
கட்டுரைகளைப் பொருத்தவரை தான் வசிக்கும் தெரு, கார் வாங்கிய அனுபவம், பிரமிள் பற்றிய பேச்சு, பாரதியார் குறித்த நினைவுகள் என்று பல வகையில் உள்ளன. இவற்றுள் பிரமிள் பற்றிய கட்டுரை அருமை.
அதிலும் குறிப்பாக ஆத்மாராமின் இரங்கல் கூட்டத்தில் பிரமிள் உணர்ச்சிவசப்பட்டு அழுதது, கு.ப.ராஜகோபாலன் தன்னுடன் மௌனியை அழைத்துச் சென்று வ.ரா.வை சந்தித்தபோது வ.ரா.வுக்கும் மௌனிக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் ஆகியவை வியப்பளிப்பவையாக உள்ளன. மறதியைப் பற்றிய கட்டுரையும் குறிப்பிடத்தக்கது.
இதுபோன்று வெவ்வேறு விதமான படைப்புகளடங்கிய தொகுப்புக்கு பொருளடக்கம் இன்றியமையாதது. அது இத்தொகுப்பில் இல்லை. ஆனால் அச்சுப்பிழைகளுக்கோ பஞ்சமில்லை (ஆபீஸ் அபிஸ் ஆனதை மன்னிக்கலாம், ஆனால் மௌனி பௌனி ஆகலாமா?). பொழுதுபோக்காகப் படிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com