தாய் - மாக்சிம் கார்க்கி; தமிழில்: தொ.மு.சி. ரகுநாதன்

தாய் - மாக்சிம் கார்க்கி; தமிழில்: தொ.மு.சி. ரகுநாதன்

பக்.608; ரூ.350; கவிதா பப்ளிகேஷன், சென்னை-17; 044 - 2436 4243.
1906 இல் ரஷ்ய மொழியில் வெளிவந்த இந்த நாவல், உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 1917 ரஷ்யப் புரட்சிக்கு முன்பு நடந்த 1905 ஆம் ஆண்டு நடந்த புரட்சியின் காலத்தில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. 
ரஷ்ய தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்யும் தந்தையை இழந்த பாவெல் என்ற இளைஞன், புரட்சிகர சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்கிறான். அவனுடைய தாய்க்கு தொடக்கத்தில் இது உடன்பாடில்லை என்றாலும், சிறிதுநாளில் மகனின் கருத்துகளால் ஈர்க்கப்படுகிறாள். வீட்டில் நடக்கும் கூட்டங்களில் மகனின் நண்பர்கள் பேசுவதைக் கேட்கிறாள். 
தொழிற்சாலைக்குள் ரகசியமாக பிரசுரங்களை விநியோகித்து மகனின் இயக்க வேலைகளுக்குத் துணை நிற்கிறாள். காவல்துறையின் தாக்குதலுக்கு உள்ளாகிறாள். எனினும் அஞ்சவில்லை. 
'ஜனங்களே ஒன்று திரளுங்கள்... எதைக் கண்டும் பயப்படாதீர்கள். நீங்கள் இப்போது வாழ்கின்ற வாழ்க்கையை விட எதுவும் கொடுமை வாய்ந்ததாக இருக்கப் போவதில்லை' என்று முழக்கமிடுகிறாள். எந்தவிதமான போராட்ட குணமும் இல்லாத ஒரு தாய், எவ்வாறு புரட்சியாளராக மாறுகிறார் என்பதே நாவலின் மையம். 
அன்றைய ரஷ்யத் தொழிலாளர்கள், புரட்சியாளர்களின் இயல்பான வாழ்க்கையைத் துல்லியமாகச் சித்திரிக்கிற இந்நாவல், சமூக மாற்றத்தை விரும்பும் ஒவ்வொருவரின் கைகளிலும் இருக்க வேண்டி ஒன்று.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com