நொய்யல் இன்று - பொங்கி அழித்த காட்டாற்றின் பயணம்

நொய்யல் இன்று - பொங்கி அழித்த காட்டாற்றின் பயணம்- கா.சு.வேலாயுதன்; பக்.206; ரூ.140; சப்னா புக் ஹவுஸ், கோவை-2; )0422- 4629999.
நொய்யல் இன்று - பொங்கி அழித்த காட்டாற்றின் பயணம்

நொய்யல் இன்று - பொங்கி அழித்த காட்டாற்றின் பயணம்- கா.சு.வேலாயுதன்; பக்.206; ரூ.140; சப்னா புக் ஹவுஸ், கோவை-2; )0422- 4629999.
வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் தோன்றி வரும் ஆறுதான் நொய்யல் ஆறு. நீலியாறு, கோவை குற்றாலம், வைதேகி நீர் வீழ்ச்சி ஆகியவைதான் நொய்யல் ஆறாக மாறுகின்றன. 
இன்று காய்ந்து கிடக்கும் இந்த ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு பலமுறை ஏற்பட்டிருக்கிறது. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் நொய்யல் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டபோது, அவரே நேரடியாக வெள்ளநீரில் இறங்கி நடந்து மக்களைச் சந்தித்திருக்கிறார். 
இப்போது நொய்யல் ஆற்றின் பல பகுதிகள் குடியிருப்புகளாக மாற்றப்பட்டுவிட்டன. அவை ஓடும் பகுதிகளில் உள்ள குளங்களுக்கும் இதேகதிதான். 
நொய்யல் ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியான கல்கொத்தி நீரோடை கேரள - தமிழக எல்லைப் பகுதியில் அமைந்திருக்கிறது. இந்தப் பகுதியில் மணல், கற்களைத் தடுப்பு வைத்து, இந்த நீரோடை நீரை கேரளப்பகுதிக்குள் திசை திருப்பிவிடுவதும் நடந்திருக்கிறது. அதை எதிர்த்த போராட்டங்களும் நடந்திருக்கின்றன.
சாயப் பட்டறைக் கழிவுகள் நொய்யலாற்றில் கலக்கப்பட்டு நதி, நஞ்சாகியது. சாயக் கழிவுகள் கலப்பது பெரும்பிரச்னையாக உருவெடுத்துள்ள நிலையில், சாயக் கழிவு நீரைச் சுத்திகரிக்கும் பணிகள் எந்த அளவு நடைபெறுகின்றன என்பன போன்ற விவரங்களும் இந்நூலில் கூறப்பட்டிருக்கின்றன. 
நொய்யல் ஆறு மீட்பு இயக்கங்களின் நடவடிக்கைகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு நொய்யலாறு தொடர்பான எல்லாப் பிரச்னைகளையும் இந்நூல் அலசி ஆராய்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com