இலக்கிய மென்தளம்

இலக்கிய மென்தளம் - ச.வனிதா; பக்.112; ரூ.120; அய்யா நிலையம், 10, ஆரோக்கியா நகர், முதல் தெரு, இ.பி.காலனி, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர்-613006.
இலக்கிய மென்தளம்

இலக்கிய மென்தளம் - ச.வனிதா; பக்.112; ரூ.120; அய்யா நிலையம், 10, ஆரோக்கியா நகர், முதல் தெரு, இ.பி.காலனி, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர்-613006.
சங்க இலக்கியங்களிலிருந்து தற்கால இலக்கியங்கள் வரை ஆராய்ந்து, தானறிந்த உண்மைகளை இந்நூலில் உள்ள 20 கட்டுரைகளில் அளித்திருக்கிறார் நூலாசிரியர். 
தமிழிலக்கியங்களின் பேசுபொருள், வெளிப்பாடு ஆகியவற்றில் ஏற்பட்ட மாறுதல்களை இந்நூலில் உள்ள கட்டுரைகள் பேசுகின்றன. மாறுதல்களை மிக சாதாரணமாக ஏற்றுக் கொள்ளும் நூலாசிரியரின் பண்பு பாராட்டத்தக்கது. "நம் முன்னோர்களைப் போல் நாம் உணவு உண்பதில்லை. உணவிலும் உடைகளிலும் நாகரிகத்திலும் பலப்பல மாறுதல்களை நாளுக்குநாள் பெற்று வருகின்றோம். அவ்வாறே இலக்கியமும் அமைப்புமுறை, பாடுபொருள் என்னும் நிலையில் பல மாற்றங்களைப் பெற்றுள்ளதாக' அவர் கருதுவதே அவருடைய ஆய்வுப் பார்வையை நமக்கு காட்டிவிடுகிறது. 
தமிழில் பக்தி இலக்கியங்கள் பல வெளிவந்திருந்தாலும் சிறு தெய்வங்களுக்கான இலக்கியப் பதிவுகள் குறைவு; அவை மக்கள் பாடல்களாகவே உணரப்பட்டன; வழங்கப்பட்டன. குலதெய்வ வழிபாடுகள் குறித்த கதைப்பாடல்கள், சடங்குப் பாடல்கள், சிறுதெய்வப் பாடல்கள் எல்லாமும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்கிறார் நூலாசிரியர். 
"பழந்தமிழ் மக்களின் ஒப்பனைக் கலை' பற்றி விளக்கும் கட்டுரையும் உண்டு. இந்நூல், பழந்தமிழ் இலக்கியங்களிலும், பக்தி நெறிகளிலும் ஆர்வமுள்ளவர்களுக்கு படைக்கப்பட்ட விருந்து. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com