கூவாய் குறளே

கூவாய் குறளே - க.ப.அறவாணன்; பக்.160; ரூ.120; தமிழ்க் கோட்டம், சென்னை-29; )044-2374 4568.
கூவாய் குறளே

கூவாய் குறளே - க.ப.அறவாணன்; பக்.160; ரூ.120; தமிழ்க் கோட்டம், சென்னை-29; )044-2374 4568.
திருக்குறள் பொருட்பாலில் 71 முதல் 80 வரை உள்ள குறள்களும் அதற்கான உரையும், சிறப்புக் குறிப்பும் இந்நூலில் உள்ளன. இவை சென்னை வானொலியில், ஜூலை முதல் ஆகஸ்ட் 2017 வரை "குறள் ஒலி' என்ற தலைப்பில் வானொலி உரையாக ஒலிபரப்பப்பட்டவை. தற்போது அவை தொகுக்கப்பட்டு நூல் வடிவம் பெற்றுள்ளது.
இவ்வானொலி உரைகளில் "திருக்குறள் தொடர்பாக விவாதிக்கப்பட்ட செய்திகள் மீண்டும் விவாதிக்கப்பட வேண்டும் என்றும், பொருத்தமானவற்றை வாழ்க்கையில் நாம் போற்ற வேண்டும், அதுவே திருவள்ளுவருக்கும் நம் முன்னோர்களுக்கும் நாம் செய்யும் நன்றியாக இருக்கும்' என்பதையும் வலியுறுத்திக் கூறியுள்ள நூலாசிரியரின் கருத்து ஏற்கதக்கது.
""அரசியல் நிர்வாகத்தில் குறிப்பறிதல் மிக மிக முதன்மை வாய்ந்தது என்பதையும் குறிப்பறியும் ஆற்றல் உள்ளவர் தெய்வத்திற்கு நிகர் (780) எனத் திருவள்ளுவர் குறிப்பதால் உணரலாம்'' என்று கூறி குறிப்பறிதல் தொடர்பான பழமொழி, நான்மணிக்கடிகை, கொன்றைவேந்தன் முதலிய அற இலக்கியங்களிலிருந்து மேற்கோள் காட்டி விளக்கியிருக்கிறார். 
அவை அறிதலில், குறள்களின் தெளிவுரையுடன், பழங்கால அரச அவை, அரசர் அவையில் புலவரின் முதன்மை, அரசரின் திறமையான அவை, கற்றறிந்த அவை, அன்றைய அவை இன்றைய உச்ச நீதிமன்றம் என "அவை' தொடர்பான செய்திகள் விவரிக்கப்பட்டுள்ளன. தேவையான இடங்களில் குட்டிக் கதைகளுடன் விளக்கியிருப்பது மிகவும் சிறப்பு. திருக்குறள் வரிசையில் குறிப்பிடத்தக்க நூல் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com