பட்டுப்புழு வளர்ப்பு

பட்டுப்புழு வளர்ப்பு - பி.மாரியப்பன்; பக்.264; ரூ.200; இயல் வெளியீடு, 23 பி/2739, தொப்புள் பிள்ளையார் கோவில் தெரு, தெற்கலங்கம், தஞ்சாவூர் -1.
பட்டுப்புழு வளர்ப்பு

பட்டுப்புழு வளர்ப்பு - பி.மாரியப்பன்; பக்.264; ரூ.200; இயல் வெளியீடு, 23 பி/2739, தொப்புள் பிள்ளையார் கோவில் தெரு, தெற்கலங்கம், தஞ்சாவூர் -1.
பட்டாடையை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். பட்டு தோன்றிய வரலாற்றை எடுத்துச் சொல்வதோடு, பட்டு நூலின் உற்பத்தி குறித்தும் பட்டின் பல்வேறு வகைகள் பற்றியும் இந்நூல் எடுத்துக் கூறுகிறது.
பட்டுப்புழு வளர்ப்பிற்கு ஆதாரமாக செயல்படக்கூடிய மல்பெரி தாவரம் பற்றியும், அதைப் பயிரிடும் முறை, தாவரப் பெருக்க முறை, பயிரிடும் காலம் போன்றவற்றையும் நூல் விளக்குகிறது. பட்டுப்புழு வளர்ப்பதற்கான சூழல், வெப்பம், ஈரப்பதம், புழுவிற்கு வழங்கப்படும் இலை, பருவப் பட்டுப்புழுவின் உணவுத்தேவை என எல்லாவற்றையும் விரிவாக விளக்கியிருக்கிறது இந்நூல். சுமார் 40 ஆயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பினை வழங்கும் பட்டு வளர்ப்புத் தொழில் பற்றிய தகவல்களை தொகுத்து வழங்குகிறது.
பட்டுப் புழு வளர்ப்பு குறித்து பயிலும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயனளிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com