பிருந்தாவன் யாத்திரை

பிருந்தாவன் யாத்திரை - சுவாமி கமலாத்மானந்தர்; பக்.276; ரூ.200; ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை-4; )044 - 2462 1110.
பிருந்தாவன் யாத்திரை

பிருந்தாவன் யாத்திரை - சுவாமி கமலாத்மானந்தர்; பக்.276; ரூ.200; ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை-4; )044 - 2462 1110.
நம்நாட்டில் தீர்த்த யாத்திரை செல்லும் வழக்கம் தொன்று தொட்டு நிலவி வருகிறது. அவற்றில் அயோத்தி, பிருந்தாவன் யாத்திரைகள் மிகவும் புனிதமானவை. அவை இரண்டும் கடவுள் வாழ்ந்த இடம் என்ற நம்பிக்கையே அதற்குக் காரணம்.
பகவான் கிருஷ்ணர் வாழ்ந்த புண்ணிய பூமிகளான பிருந்தாவனம், மதுரா, கோகுலம், நந்தகாம், பர்ஸானா, கோவர்த்தன் மலை ஆகிய ஆறு இடங்களும் சேர்த்தே "பிருந்தாவன்' அல்லது "விரஜ மண்டலம்' என்று அழைக்கப்படுகிறது.
உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் பிருந்தாவனுக்கு மூன்று முறை செல்லும் அதிர்ஷ்டம் பெற்ற ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மூத்த துறவி சுவாமி கமலாத்மானந்தர், தனது அனுபவத்தில் இருந்து இந்நூலை எழுதியுள்ளார்.
முதலில் "ஸ்ரீராமகிருஷ்ண ஆனந்தம்' இதழில் சுவாமி கமலாத்மானந்தர் தொடராக எழுதியதன் நூல் வடிவமே இந்தப் புத்தகம்.
விரஜ மண்டலத்தில் பக்தர்கள் வழிபட வேண்டிய கோவில்கள், புனித நீராட வேண்டிய நீர்நிலைகள், காண வேண்டிய முக்கிய இடங்கள் ஏராளமாக உள்ளன. அந்த இடங்கள் அனைத்தையும் காண, குறைந்தபட்சம் 25 நாள்கள் ஆகும். அப்படி செல்ல முடியாதவர்கள் 5 நாள்களையாவது பிருந்தாவனில் கழிக்க வேண்டும்.
தீர்த்த யாத்திரை தொடர்புடைய இடங்கள் குறித்த இவை போன்ற ஏராளமான தகவல்கள் மற்றும் விவரங்கள் இந்தப் புத்தகத்தில் தரப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com