செகண்ட் ஒப்பினியன்

செகண்ட் ஒப்பினியன் - டாக்டர் கு.கணேசன்; பக்கம் 304; ரூ.200; சூரியன் பதிப்பகம், சென்னை - 4; )044 - 4220 9191.
செகண்ட் ஒப்பினியன்

செகண்ட் ஒப்பினியன் - டாக்டர் கு.கணேசன்; பக்கம் 304; ரூ.200; சூரியன் பதிப்பகம், சென்னை - 4; )044 - 4220 9191.
நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, ஒரு மருத்துவர் கூறும் நோய் குறித்தோ, பரிந்துரைக்கும் சிகிச்சை குறித்தோ நோயாளிக்கு சந்தேகம் வரும்போது, வேறு மருத்துவரிடம் மறுஆலோசனை (நங்ஸ்ரீர்ய்க் ஞல்ண்ய்ண்ர்ய்) கேட்கத் தயங்குவோருக்கு உண்மை நிலையை தெளிவுபடுத்துவது , நோய் வரும் முன்னர் காக்கும் வழிகளை எடுத்துச் சொல்வது ஆகியவையே இந்த நூலின் முக்கிய சாராம்சமாகும். 
அதனை அடிப்படையாகக் கொண்டு நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் ஏற்படும் முக்கியமான நோய்கள் மற்றும் அதற்கான சிகிச்சைகள், சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள், சிகிச்சைக்கு ஆகும் தோராயமான பணச்செலவு, தடுப்பு முறைகள் ஆகியவை குறித்து 43 கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன. 
பரம்பரையாக சில நோய்கள் வரலாம் என்ற நிலை கடந்து இப்போது எவருக்கும் எந்த நோயும் எப்போதும் வரலாம் என்ற நிலை உள்ளது. எந்த நோயாக இருந்தாலும் அதற்குத் தீர்வு உள்ளது எனும் நிலையில் இப்போது இருக்கிறோம். ஆனால் பெரும்பாலும் இந்த வாய்ப்புகளை படித்த, மேல்தட்டு மக்கள் மட்டுமே பயன்படுத்திக் கொள்கின்றனர். ஒரு புதிய மருத்துவக் கண்டுபிடிப்பின் பயன் சாமானியருக்கும் எளிதில் கிட்ட வேண்டும் அப்போதுதான் அந்தக் கண்டுபிடிப்புக்கு முழுமையான அர்த்தம் கிடைக்கும் என்கிறார் நூலாசிரியர்.
இப்போதைய மருத்துவர்கள் பெரும்பாலும் பிஸியாகவே இருப்பதால், அவர்களுக்கு நோயாளிகளுடன் பேசுவதற்கும் அவர்களின் சந்தேகங்களைக் களைவதற்கும் நேரம் இருப்பதில்லை. இதனால் நம் தொண்டை வரை வந்து நிற்கும் சந்தேகங்கள் தீர்க்கப்படாமலேயே இருக்கின்றன. அவ்வாறு தீர்க்கப்படாத சந்தேகங்களுக்கு இந்த நூல் விடையளிக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com