சிதைக்கப்பட்ட தமிழனின் வரலாறு

சிதைக்கப்பட்ட தமிழனின் வரலாறு- க. திருத்தணிகாசலம், பக். 576; ரூ. 599; ரத்னா பதிப்பகம், 8-18, 23ஆவது தெரு, ஜெய் நகர், அரும்பாக்கம், சென்னை- 106.
சிதைக்கப்பட்ட தமிழனின் வரலாறு

சிதைக்கப்பட்ட தமிழனின் வரலாறு- க. திருத்தணிகாசலம், பக். 576; ரூ. 599; ரத்னா பதிப்பகம், 8-18, 23ஆவது தெரு, ஜெய் நகர், அரும்பாக்கம், சென்னை- 106.
 இந்த நூல் 67 கட்டுரைகளைக் கொண்டது.
 தமிழர் வரலாற்றின் தொடக்கமாக 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பூம்புகாரில் தொடங்கி, 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்துசமவெளி, 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆதிச்சநல்லூர், அண்மையில் அகழாய்வு செய்யப்பட்ட கீழடி வரை ஏராளமான தகவல்களைக் கொட்டியிருக்கிறார் நூலாசிரியர்.
 தகடூர் நாட்டை (தற்போதைய தருமபுரி மாவட்டம்) ஆண்ட அதியமான் மற்றும் அவரது மகன் எழினி ஆகியோரின் பெயர்கள், இங்கிருந்து சென்ற இரும்புத் தொழில்நுட்பத்தின் நினைவாக துருக்கியிலுள்ள இரும்பு சார்ந்த பகுதிக்கு அதியமான் என்றும், உருக்கு ஆலைக்கு எழினி என்றும் பெயர் இருப்பதையும் எடுத்துக்காட்டாய் முன்வைக்கிறார். பண்டமாற்று முறைக்கு மாற்றாக தமிழ்ப் பேரரசர்கள்தான் நாணய முறையைக் கொண்டு வந்ததாகவும், அதன்பிறகே உலகெங்கும் நாணய முறை வந்ததாகவும் கூறுகிறார். கப்பல் கட்டும் தொழில், பல் துலக்கும் முறை ஆகியவற்றை உலகுக்கு எடுத்துச் சொன்னவர்கள் தமிழர்களே என்கிறார்.
 படிக்கப் படிக்க இந்த நூல் மொழியியல் நூலாக, வரலாற்று நூலாக, சமூகவியல் நூலாக, கலையியல் நூலாக மாறி மாறி பரிணமிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com