கருத்தும் கலையும் - சுந்தர ராமசாமி

கருத்தும் கலையும் - சுந்தர ராமசாமி ; பக்.304; ரூ.260; அடையாளம், புத்தாநத்தம்; 04332 - 273444.
கருத்தும் கலையும் - சுந்தர ராமசாமி

கருத்தும் கலையும் - சுந்தர ராமசாமி ; பக்.304; ரூ.260; அடையாளம், புத்தாநத்தம்; 04332 - 273444.
 தமிழ் இலக்கியப் பரப்பில் முக்கியமான கருத்தியல் செயல்பாட்டாளராக விளங்கிய சுந்தர ராமசாமியின் சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், நேர்காணல்கள் ஆகியனவற்றை ஒரு பருந்துப் பார்வையில் பார்த்து, அவை குறித்த தனது விமர்சனரீதியான கருத்துகளை தொகுத்துத் தந்திருக்கிறார் நூலாசிரியர்.
 மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ள இந்நூலின் முதல் பகுதியில் "சுந்தர ராமசாமியின் கருத்தியல்' என்ற பொதுத் தலைப்பில் மூன்று பிரிவுகளாக கட்டுரைகள் அமைந்துள்ளன. "செவ்வியல் தமிழ் இலக்கியமும் மேற்கத்திய இலக்கிய இயக்கங்களும்' என்ற பொதுத் தலைப்பில் அமைந்த இரண்டாவது பகுதியில் ஒரு நீண்ட கட்டுரை அமைந்துள்ளது. மூன்றாவது பகுதி "சுந்தர ராமசாமியின் கலையியல்' என்ற பொதுத் தலைப்பில் சுந்தர ராமசாமியின் சிறுகதைகள் குறித்து இரு கட்டுரைகள் அமைந்துள்ளன. (ஏனோ சுந்தர ராமசாமியின் (பசுவய்யா) கவிதைகளை விட்டுவிட்டார் நூலாசிரியர்)
 சுந்தர ராமசாமி பல்வேறு நேர்காணல்களில் பேசிய பேச்சுகளும் பல்வேறு பத்திரிகைகளில் எழுதிய எழுத்துகளும் எவ்வளவு விரிவும் ஆழமும் கொண்டவை என்பதை ஆசிரியர் சிறப்பாக விவரித்திருக்கிறார். சில இடங்களில் சுந்தர ராமசாமியோடு நூலாசிரியர் முரண்படுவதையும் காண முடிகிறது.
 குறிப்பாக, " தமிழின் நவீனத்துவவாதிகளாக புதுமைப்பித்தனையும் பாரதியாரையும் குறிப்பிடும் சுந்தர ராமசாமி உண்மையான சமூக சீர்திருத்தவாதியான அ.மாதவையாவை குறிப்பிடாதது ஏன்' என்ற கேள்வி எழுப்புவதும், " பத்திரிகை, அரசியல், சமயம் ஆகியவற்றின் வணிகக் கூட்டுறவே சமூக, கலாசார சீரழிவுக்குக் காரணம் என்று குறிப்பிடும் சுந்தர ராமசாமி " வணிக' என்ற அடைமொழியை இணைத்திருப்பது பாரதூரமான அரசியல் பொருளாதாரம், கருத்தியல், சமய அறிவியல் வியாபகம் கொண்டதாக ஆகிறது' என்று குறிப்பிடுவதும் சிந்தனையைத் தூண்டுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com