சுபயோக சுப முகூர்த்தம் - திருமணப் பொருத்த கைடு

சுபயோக சுப முகூர்த்தம் - திருமணப் பொருத்த கைடு - எஸ்.அன்பழகன்; பக்.384; ரூ.250; அன்பு பப்ளிசிங் ஹவுஸ், 17, அன்பு அவென்யூ, ஏரகரம் ரோடு, மேலக்காவேரி, கும்பகோணம்- 612002. 
சுபயோக சுப முகூர்த்தம் - திருமணப் பொருத்த கைடு

சுபயோக சுப முகூர்த்தம் - திருமணப் பொருத்த கைடு - எஸ்.அன்பழகன்; பக்.384; ரூ.250; அன்பு பப்ளிசிங் ஹவுஸ், 17, அன்பு அவென்யூ, ஏரகரம் ரோடு, மேலக்காவேரி, கும்பகோணம்- 612002. 
திருமணப்பொருத்தம் குறித்து அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தெளிவாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதப்பட்டுள்ளது இந்நூல். திருமணப்பொருத்தங்களான தசவித பொருத்தங்கள், தோஷ சாம்யம், ஜாதகப் பொருத்தம், திருமணத்திற்கு நாள் குறிப்பது போன்றவற்றை எளிய முறையில் ஜோதிடரல்லாதோரும் அறிந்துகொள்ள எழுதப்பட்ட அரிய நூல். ஏழாமிடமான களத்திர ஸ்தானத்தைக் குறித்தும் அதில் நிற்கும் கிரகங்கள், ஏழாம் ஸ்தானத்தின் மதிப்பு, இந்த ஸ்தானத்திற்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை தெளிவு படுத்தியிருக்கும் ஆசிரியர், ஆயுள் ஸ்தானம் குறித்தும் விளக்கியிருப்பது அருமை. 
ரஜ்ஜு, யோனி, ராசி, தினம், ராசி அதிபதி, கணம், வசியம், மகேந்திரம், ஸ்திரீ தீர்க்கம், வேதை ஆகிய 10 பொருத்தங்களில் திருமணத்திற்கு மிகவும் அவசியமான சில பொருத்தங்களையும் குறிப்பிட்டுள்ளார். ராகு- கேது மற்றும் நாக தோஷங்களையும்
விவரித்துள்ளார். மேலும் புகழ்பெற்ற அரசியல் தலைவர்களின் ஜாதகங்களைக் கொடுத்து அவர்களுக்கு இடையே உள்ள அரசியல் நட்பு, பகை, வெற்றி, வீழ்ச்சி, வாழ்க்கை, குடும்ப நிலை, திருமணம், புத்திர பாக்கியம் போன்றவற்றையும் அலசியிருப்பது சிறப்பு. 
முகூர்த்த லக்னம் குறிக்கவும், பெண்ணின் நட்சத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான ஆண் நட்சத்திரங்களைக் கொடுத்து, அவற்றில் முதல் தரமான பொருத்தங்கள், இரண்டாம் தரமான 
பொருத்தங்கள் என பொருத்தம் பார்க்கக் கற்றுக் கொடுத்துள்ளார் ஆசிரியர். வீட்டிலேயே திருமணப் பொருத்தங்களைக் கணிக்க உதவும் அரிய
புத்தகம் இது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com