பகவான் புத்தர் - தர்மானந்த கோஸம்பி

பகவான் புத்தர் - தர்மானந்த கோஸம்பி; தமிழில்: கா.ஸ்ரீ.ஸ்ரீ; பக்.334; ரூ.270 ; சாகித்திய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.
பகவான் புத்தர் - தர்மானந்த கோஸம்பி

பகவான் புத்தர் - தர்மானந்த கோஸம்பி; தமிழில்: கா.ஸ்ரீ.ஸ்ரீ; பக்.334; ரூ.270 ; சாகித்திய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.
 பகவான் புத்தரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல். தர்மானந்த கோஸம்பி எனும் பாலி மொழி அறிஞர் மராட்டி மொழியில் எழுதியதன் தமிழாக்கம்.
 பன்னிரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலில் அந்தக் காலத்து அரசியல் நிலை, சமயநிலை, ஆன்மவாதம், கர்ம யோகம், சாதிப் பிரிவினை போன்ற தலைப்புகளில் அக்காலத்திய சமூகச் சூழல் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 புத்தர் குறித்து இதுவரை கூறப்பட்டு வரும் பல செய்திகள் தவறானவை என்பதை இந்நூலைப் படிக்கும்போது அறிய முடிகிறது. குறிப்பாக, புத்தர் போதிசத்துவராக இருந்தபோது வீட்டை விட்டு வெளியேறிய அன்று எவரிடமும் கூறாமல் சன்னன் என்னும் சாரதியின் உதவியோடு கந்தகம் எனும் குதிரையில் ஏறி அநோமா எனும் நதிக்கரைக்குச் சென்று ஆபரணங்களை சன்னனிடம் தந்துவிட்டு வாளினால் கேசத்தை மழித்துக் கொண்டு பின் தனியே நடக்க, குதிரை அங்கேயே இறந்துவிட, சன்னன் அரண்மனை திரும்பியதாகச் சொல்லப்பட்டு வந்தது.
 ஆனால் புத்த பகவான் தாம் வீட்டைவிட்டுக் கிளம்பிய நிகழ்ச்சியைக் குறிப்பிடும்போது, "அப்போது நான் இளைஞனாக இருந்தேன். என் தாய், தந்தை எனக்கு அனுமதி கொடுக்கவில்லை. அவர்கள் ஓயாமல் அழுது கொண்டிருந்தனர். நான் அதனைப் பொருட்படுத்தாமல் தலையை முண்டனம் செய்து கொண்டு துவராடையால் உடலை மூடியவனாய் வீட்டிலிருந்து வெளியேறினேன்' என்று குறிப்பிடுகிறார்.
 அதுமட்டுமல்ல புத்தர், மகாவீரர் போன்றோர் புலால் உணவை உண்டதற்கான ஆதாôரங்களையும் விரிவாக விளக்கியுள்ளார். கா.ஸ்ரீ.ஸ்ரீயின் மொழிபெயர்ப்பு அற்புதம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com