102. முரசதிர்ந்து எழுதரு  - பாடல் 9

பிரமனும் திருமாலும்
102. முரசதிர்ந்து எழுதரு  - பாடல் 9

பாடல் 9:

    முயன்றவர் அருள் பெறு முதுகுன்ற மேவி அன்று
    இயன்றவர் அறிவரியீரே
    இயன்றவர் அறிவரியீர் உமை ஏத்துவார்
    பயன் தலை நிற்பவர் தாமே

விளக்கம்:

முயன்றவர்=தவநெறியில் வாழ்ந்து மெய்ப்பொருளை அடைய முயற்சி செய்யும் தவ முனிவர்கள்; இயன்றவர்=தம்மால் இயலும் என்ற எண்ணத்துடன் செயல்பட்ட பிரமனும் திருமாலும்; பயன்தலை நிற்பவர்=தலையாய பயன் அடைவார்கள்; உயிர்கள் பெறக்கூடிய பயன்களில் முக்திப்பெற்றினை விடவும் சிறந்த பயன் ஏதும் இல்லை என்பதால் முக்திப் பேறு, இங்கே தலை சிறந்த பயனாக குறிப்பிடப்படுகின்றது. 

பொழிப்புரை:

மெய்ப்பொருளை காணவேண்டும் என்ற நோக்கத்துடன் தவநெறியில் வாழ்ந்து முயற்சி செய்யும் முனிவர்களுக்கு அருள் புரிபவனாகத் திகழும் முதுகுன்றத்து இறைவனே, தமது முயற்சியால் உனது அடியையும் முடியையும் காணலாம் என்ற முனைப்புடன் செயல்பட்ட திருமாலும் பிரமனும் காண முடியாதவராக விளங்கியவரே, இவ்வாறு பிரமன் திருமால் ஆகிய இருவரும் காண முடியாமல் நின்ற உம்மை புகழ்ந்து பாடும் அடியார்கள், தலை சிறந்த பயனை அடைவார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com