காங்கோ தமிழ் இளைஞர் பண்பாட்டு மன்றத்தில் தீபாவளி பண்டிகை

காங்கோ தமிழ் இளைஞர் பண்பாட்டு மன்றத்தின் சார்பில் தீபாவளி விழா சிறப்பாக கின்ஷாசாவில் உள்ள இங்கிலீஷ் இன்டர்நேஷனல் பள்ளியில் கொண்டாடப்பட்டது. 

கின்ஷாசா: காங்கோ தமிழ் இளைஞர் பண்பாட்டு மன்றத்தின் சார்பில் தீபாவளி விழா சிறப்பாக கின்ஷாசாவில் உள்ள இங்கிலீஷ் இன்டர்நேஷனல் பள்ளியில் கொண்டாடப்பட்டது.  மாலை தமிழ் தாய் வாழ்த்து பாடலை தமிழ் பள்ளிக்கூட மாணவர்கள் பாடியபின்னர்,  தமிழ் பள்ளி ஆசிரியர்கள் மங்களம் சொக்கலிங்கம், லட்சுமி சிதம்பரம், விஷாலாட்சி அருண், இந்துமதி நந்தகுமார் மற்றும் ராஜமோகன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.  வரவேற்புரையை மன்றத்தின் துணை செயலாளர் மங்களம் சொக்கலிங்கம் நிகழ்த்தினார்.

குழந்தை வன்ஷிகா விஜய் வாழ்த்துப்பாடல் பாட குழந்தைகள் ரோஷலின், ரோபி, ரியா, கனிஷ்கா, வன்ஷிகா, கீத்தீகா, தீக்ஷிதா, மீனுலா, தருண், ரக்ஷிதா, மித்திரன், லக்ஷன், ரியா, மகேஷ், கமல், வேதாந், ருத்ரன், துர்வா, சர்ஜீவ், தேவேஷ் இவர்கள் பல்வேறு பாடல்கள், நடனங்களையும், நாடகத்தையும் நடத்தி அனைவரையும் மகிழ்வித்தனர்.

தம்பதிகளுக்காக நீங்களும் உங்கள் ஜோடியும் என்ற நிகழ்ச்சியை கார்த்திகாயினி விஜய், இந்து சுதீஷ் ஆகியோர் நெறிப்படுத்தி,  வீரப்பன் - கஸ்தூரி தம்பதிகள்,  நந்தகுமார் - இந்துமதி தம்பதியினர், பாலாஜி - ஜெயஸ்ரீ தம்பதியினர், பாண்டியமன்னன் - மோகனா தம்பதியினர், சாரதி - லஷ்மி தம்பதியினர்  கலந்துகொண்டு மிக சிறப்பித்தனர்.

ஷங்கர், சண்முகவேல் மற்றும் சாலா ஆகியோர் திரைப்பட பாடல்களை பாடி சங்கத்தின் உறுப்பினர்களை இசை வெள்ளத்தில் நனைய வைத்தார்கள்.

தமிழ் இளைஞர் பண்பாட்டு மன்றத்திற்கான http://www.tycacongo.com/ இணைய தளத்தை கிரிஜா கண்ணன் துவக்கிவைத்து, இந்த இணையதளம் உருவாக காரணமாக இருந்த சிதம்பரம், வெங்கட்,  பிரசன்னா,  திவ்யா சந்தானராமன், ஜோஸப், மன்றத்தின் தலைவர் சுந்தர் ராஜன், செயலாளர் சௌந்தர ராஜன் மற்றும்  ஆர்.எம்.பாபு  ஆகியோர்கள், இந்த இணையதளத்தை தயாரித்து கொடுத்த திவ்யேஷ் அவர்களுக்கு நினைவு பரிசு ஒன்றை வழங்கி கவுரவித்தனர்.

இந்த தீபாவளி விழா நிகழ்ச்சிக்கான உணவு மற்றும் விழா ஏற்பாடுகளை ரூபன், விக்டர், அருண், ராஜமோகன்மன்றத்தின் பொருளாளர் ஆனந்த் மற்றும் மன்றத்தின் செயலாளர் சௌந்தரராஜன் சிறப்பாக செய்து இருந்தனர்.

இந்த விழாவை தொகுத்து மன்றத்தின் துணை தலைவர் ஜான்சன், கலாச்சார செயலாளர் மணிசங்கர், மற்றும் ஷங்கர் ஆகியோர் வழங்கினர்.

இறுதியாக மன்றத்தின் கலாச்சார துணை செயலாளர்  ஜெயஸ்ரீ பாலாஜி நன்றியுரை தெரிவிக்க விழா இனிதே நிறைவேறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com