சுவடுகள் 2016 - விளையாட்டு

ரியோ ஒலிம்பிக்கில் இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
சுவடுகள் 2016 - விளையாட்டு

ஜனவரி
4    பிசிசிஐ மறுசீரமைப்புக்காக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட லோதா குழு, அமைச்சர்கள் பிசிசிஐ நிர்வாகிகளாக பதவி வகிக்கக் கூடாது, 70 வயதுக்கு மேற்பட்டோர் நிர்வாகிகளாக இருக்க முடியாது,  ஒருவர் தொடர்ந்து 3 முறை நிர்வாகியாக இருக்கக்கூடாது போன்ற பரிந்துரைகளை வழங்கியது.
5    மும்பையைச் சேர்ந்த பிரணவ் தனவாடே (15) என்ற சிறுவன் பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் 327 பந்துகளில் 1009 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் புதிய வரலாற்று சாதனை படைத்தார். 
9    பிரிஸ்பேன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்ஸா-ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வென்றது. இது, சானியா-மார்ட்டினா ஜோடி தொடர்ந்து வெல்லும் 6-ஆவது பட்டமாகும்
10    சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்கா சாம்பியன். சென்னை ஓபனில் அவர் வென்ற 4-ஆவது பட்டம் இது.  முன்னதாக 2011, 2014, 2015 ஆகிய ஆண்டுகளிலும் அவர் பட்டம் வென்றிருந்தார். 
14    சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஸாô-ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி, சீனாவின் சென் லியாங்-ஷுவாய் பெங் ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இதன்மூலம் தொடர்ச்சியாக 28 வெற்றிகளைப் பதிவு செய்த இந்த ஜோடி, ஃபெர்னான்டஸ்-நடாஷா ஸ்வெரெவா இணையின் சாதனையை சமன் செய்தது. 
18     பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் 12 பந்துகளில் அரைசதம் அடித்து, இந்திய வீரர் யுவராஜ் சிங்கின் சாதனையை சமன் செய்தார்.
29    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வென்றது. இது, இந்த ஜோடி தொடர்ந்து வெல்லும் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். அத்துடன், தொடர்ந்து 36 ஆட்டங்களில் வெற்றி பெற்ற பெருமையை இந்த ஜோடி பெற்றது.
30    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ûஸ வீழ்த்தி முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார்.
31    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், பிரிட்டனின் ஆன்டி முர்ரேவை வீழ்த்தி பட்டம் வென்றார். இங்கு அவர் வென்ற 6-ஆவது பட்டம் இது. இதன்மூலம் ஆஸ்திரேலிய வீரர் ராய் எமர்சனின் சாதனையை சமன் செய்தார்.
பிப்ரவரி
14    இலங்கைக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
மார்ச்
6    ஆசிய கோப்பை டி20 சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி, 6-ஆவது முறையாக பட்டம் வென்றது.
8    ரஷிய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்தார். 
ஏப்ரல்
3    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்றில் இங்கிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது மேற்கிந்தியத் தீவுகள் அணி.
மே
10    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவர் ஆனதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார் சஷாங்க் மனோகர்.
17    2008-ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்களில், 12 நாடுகளைச் சேர்ந்த 31 வீரர்/வீராங்கனைகள் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததாக சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் அறிவித்தது.
29    2016-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ஜூன்
4    சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி (74) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
12    ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நெவால், 2-ஆவது முறையாக பட்டம் வென்றார். 
23    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டார். கடந்த 16 ஆண்டுகளாக இந்தப் பொறுப்பு வெளிநாட்டினரிடம் இருந்தது.
27    கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் இறுதிச் சுற்றில் ஆர்ஜென்டீனா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அதன் கேப்டன் லயோனல் மெஸ்ஸி சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ஜூலை
9    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில்  அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 7-ஆவது முறையாக பட்டம் வென்றார். 
10    யூரோ கோப்பை  கால்பந்து போட்டியின் இறுதிச்சுற்றில் போர்ச்சுகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி பட்டம் வென்றது. போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோ, காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் இடம்பெறவில்லை.
10    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே பட்டம் வென்றார்.
24    இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ், ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 
ஆகஸ்ட்
6 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 2-ஆவது போட்டியில் இலங்கை வெற்றி கண்டது. இது, கடந்த 17 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கை பெற்ற முதல் வெற்றி. 
14 ஒலிம்பிக் வரலாற்றில் மகளிர் ஜிம்னாஸ்டிக்ஸில் பங்கேற்க தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனையான தீபா கர்மாகர், இறுதிச்சுற்றில் நூலிழையில் வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டு 4-ஆம் இடத்தைப் பிடித்தார்.
15     ரியோ ஒலிம்பிக் ஆடவர் 100 மீ. ஓட்டத்தில் ஜமைக்க வீரர் உசேன் போல்ட் 3-ஆவது முறையாக தங்கம் வென்றார். 
17    ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியாவின் சாக்ஷி மாலிக் வெண்கலம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். 
18    ரியோ ஒலிம்பிக்கில் இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் பாட்மிண்டனில் வெள்ளி  வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.
செப்டம்பர்
10    பாரா ஒலிம்பிக்கில் தமிழக வீரர் மாரியப்பன் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்றார். அதே பிரிவில் இந்திய வீரர் வருண் சிங் வெண்கலப் பதக்கம் வென்றார்.
11அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில்  ஜெர்மனி வீராங்கனை ஏஞ்ஜெலிக் கெர்பர் பட்டம் வென்றார். இதன்மூலம் உலகின் முதல் நிலை வீராங்கனையாக உருவெடுத்தார்.
12 பாரா ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை தீபா மாலிக் குண்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். 
14 பாரா ஒலிம்பிக்கில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் தேவேந்திர ஜஜாரியா 63.97 மீ. தூரம் எறிந்து உலக சாதனையுடன் தங்கம் வென்றார். 
25    டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 200 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியர், சர்வதேச அளவில் 2-ஆவது வீரர் என்ற பெருமையை இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் பெற்றார். அவர் தனது 37-ஆவது டெஸ்டில் இந்த மைல்கல்லை எட்டினார்.
அக்டோபர்
3    கொல்கத்தாவில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் வென்ற இந்திய அணி, டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்தது.
11    நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 321 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.
21    லோதா குழு பரிந்துரைகளை முழுமையாக ஏற்கும் வரையில்பிசிசிஐ}மாநில கிரிக்கெட் சங்கங்கள் இடையிலான பணப்பரிவர்த்தனையை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
30    மலேசியாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் டிராபி ஹாக்கிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா.
30    இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் 108 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது, இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் பெற்ற முதல் வெற்றியாகும்.
நவம்பர்
20    சீனாவின் ஃபுஜௌ நகரில் நடைபெற்ற சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, பட்டம் வென்றார். இது அவர் வென்ற முதல் சூப்பர் சீரிஸ் பட்டமாகும்.
21    பிசிசிஐ மறுசீரமைப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பிசிசிஐ ஏற்க மறுப்பதாகக் கூறி, அதன் நிர்வாகிகளை பதவி நீக்கம் செய்யுமாறு லோதா குழு உச்ச நீதிமன்றத்தை நாடியது.
30    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், ரஷியாவின் செர்ஜி கர்ஜாகினை வீழ்த்தி பட்டம் வென்றார்.
டிசம்பர்
2 ஃபார்முலா ஒன் கார் பந்தய போட்டியின் நடப்பு சாம்பியனான நிகோ ரோஸ்பெர்க் ஓய்வு.
12    மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து க்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
17    லோதா குழு பரிந்துரை அமல்படுத்தும் வகையில், மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவியில் இருந்து சரத் பவார் (76) ராஜிநாமா செய்தார்.
18    ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு 2-ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி.
18    இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் 2-ஆவது முறையாக அட்லெடிகோ டி கொல்கத்தா அணி சாம்பியனானது.
19    சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 190.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 759 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இது, ஒரு இன்னிங்ஸில் இந்தியா பதிவு செய்த அதிகபட்ச ஸ்கோராகும்.
19     இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் கருண் நாயர் முச்சதம் (303*)  அடித்தார். அவருடைய முதல் சதமே முச்சதமாக அமைந்தது. 
20    இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா ஓர் இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
22    2016-ஆம் ஆண்டுக்கான ஐசிசியின் "சிறந்த கிரிக்கெட் வீரர்', "சிறந்த டெஸ்ட் வீரர்' ஆகிய விருதுகளை இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் பெற்றார்.
24    19 வயதுக்கு உள்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்றில் இலங்கையை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது.
27    ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் காலிறுதியில் ஒடிஸா அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் வீரர் சமித் கோயல் (26), 723 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 359 ரன்கள் விளாசி புதிய உலக சாதனை படைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com