இந்தியா-வங்கதேசம் டெஸ்ட்: இந்திய அணி 86/1

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி உணவு இடைவேளையின் போது 1 விக்கெட் இழப்புக்க்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா-வங்கதேசம் டெஸ்ட்: இந்திய அணி 86/1

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி உணவு இடைவேளையின் போது 1 விக்கெட் இழப்புக்க்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா-வங்கதேசம் இடையிலான ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹைதராபாதில் இன்று தொடங்கியது. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதைதொடர்ந்து இந்திய அணியின் துவக்க வீரர்களாக முரளி விஜய்,  கே.எல்.ராகுல் களமிறங்கினர்.

அதில் ராகுல் வந்த வேகத்திலேயே 2 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய புஜாரா, முரளி விஜய்யுடன் இணைந்து பொறுப்பான ஆட்டதை வெளிப்படுத்தி வருகிறார். முதல் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி, முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. விஜய் (45), புஜாரா (39) ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவும், 9-ஆவது இடத்தில் இருக்கும் வங்கதேசமும் மோதும் இந்த ஆட்டம், தாவீது-கோலியாத் இடையிலான மோதலாகவே பார்க்கப்படுகிறது. இந்திய மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாடும் வங்கதேச அணி, இந்தப் போட்டியில் முடிந்த அளவுக்கு போராட முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com