விம்பிள்டன் 2017 காலிறுதியில் நுழைந்தார் ரோஜர் ஃபெடரர்

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் ரோஜர் ஃபெடரர்.
விம்பிள்டன் 2017 காலிறுதியில் நுழைந்தார் ரோஜர் ஃபெடரர்

பிரபல கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் 2017 தற்போது நடைபெற்று வருகிறது. இதில், டென்னிஸின் முக்கிய நட்சத்திர வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்விட்சர்லாந்தின் முன்னணி வீரரான ரோஜர் ஃபெடரர், காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் ஜெர்மனியின் மிஸ்கா ஸ்வேரேவை எதிர்கொண்டார். இதில், 7-6 (7-3), 6-4, 6-4. என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

இதையடுத்து விம்பிள்டன் 2017 காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள பல்கேரியாவின் க்ரிகோர் டிமிட்ராவுடன் மோதவுள்ளார். நடப்பு விம்பிள்டன் தொடரில் இதுவரை ஒரு செட்டைக் கூட இழக்காமல் ஃபெடரர் வெற்றிபெற்று வருகிறார்.

இந்த வெற்றியின் மூலம் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் தனது 317-வது வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தார். மேலும், நடப்பு விம்பிள்டன் கோப்பையை வென்றால் டென்னிஸ் வரலாற்றிலேயே அதிக வயது கொண்ட விம்பிள்டன் சாம்பியன் என்ற புதிய சாதனையையும் படைப்பார்.

ரோஜர் ஃபெடரர், இதுவரை 18 கிராண்ட்ஸ்லாம் கோப்பைகளை வென்றவர். அதில் 7 விம்பிள்டன் கோப்பைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com