'நான் ஏன் அப்படி கூறினேன் என்றால்...' - ட்விட்டரில் பிரீத்தி ஜிந்தா விளக்கம்

பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா, மும்பை அணி தோல்வியடைந்தற்கு மகிழ்ச்சி அடைவதாக கூறியது ஏன் என்பதற்கு அவர் விளக்கம் தந்துள்ளார். 
'நான் ஏன் அப்படி கூறினேன் என்றால்...' - ட்விட்டரில் பிரீத்தி ஜிந்தா விளக்கம்

ஐபிஎல்-இன் கடைசி லீக் போட்டியின் போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா மைதானத்தில் தனக்கு அருகில் உள்ளவரிடம் மும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறாதது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். அவர் கூறியது, ஆடியோ இல்லாமல் விடியோவாக மட்டும் கேமராவில் பதிவாகியிருந்தன. ஆனால், சமூகவலைதளவாசிகள் உதட்டசைப்பை வைத்தே கண்டுபிடித்துவிட்டனர். 

இந்த குறிப்பிட்ட விடியோ காட்சி மட்டும் சமூகவலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்நிலையில், அவர் நேற்று (திங்கள்கிழமை) தனது ட்விட்டர் கணக்கை பின்பற்றுவர்களிடம் கேள்வி பதில் நேரத்தில் ஈடுபட்டார். 

அப்போது, மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறாதது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறியது உண்மையா? என்று ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிக்கும் வகையில் பிரீத்தி ஜிந்தா கூறியதாவது, 

"மும்பை அணி வெளியேறினால் தான் எங்களுக்கு(கிங்ஸ் லெவன் பஞ்சாப்) பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு கிடைக்கும். ஆனால், ராஜஸ்தான் தான் மகிழ்ச்சியாக உள்ளது. சென்னை அணி எங்களை தோற்கடித்து வெளியேற்றியது. அதனால், ராஜஸ்தான் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. கடைசி கட்டம் வரை கொண்டு சென்றால் நமது அணியின் வெற்றியை மட்டும் இல்லாது மற்ற அணிகளின் தோல்வியையும் பார்க்க வேண்டும்." என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com