ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2-ஆம் நாள் முடிவு: பதக்கப் பட்டியலில் 8-ஆவது இடத்தில் இந்தியா

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 2-ஆவது நாள் முடிவில் இந்தியா 2 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களுடன் 8-ஆவது இடத்தில் உள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 2-ஆவது நாள் முடிவில் இந்தியா 2 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களுடன் 8-ஆவது இடத்தில் உள்ளது. 

18-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜகார்த்தாவில் சனிக்கிழமை கோலாகலமான தொடக்க விழாவுடன் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை முதல் போட்டிகள் நடைபெறத் தொடங்கின. ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் இன்றைய 2-ஆவது நாளில் இந்தியா 1 தங்கம் மற்றும் 2 வெள்ளிப்பதக்கங்களை வென்றது. இதன்மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 2-ஆவது நாள் முடிவில் இந்தியா 2 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களுடன் 8-ஆவது இடத்தில் உள்ளது.

மகளிர் மல்யுத்தம்:

50 கிலோ எடை ஃபிரீஸ்டைல் பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தங்கம் வென்றார். 

துப்பாக்கிச் சூடு:

10 மீட்டர் ஏர் ரைஃபிள் ஆடவர் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் தீபக் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். 

ஹாக்கி:

இந்திய ஆடவர் ஹாக்கி அணி இந்தோனேஷியாவை 17-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. 

பாட்மிண்டன் மகளிர் அணி:

ஜப்பான் அணியிடம் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. 

மகளிர் கபடி போட்டி:

இந்திய அணி 33-23 என்ற புள்ளிகள் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தியது. 

மகளிர் ஒற்றையர் டென்னிஸ்:

இந்தோனேஷிய வீராங்கனை குமுல்யா பேட்ரைஸை 6-2,6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்றார். 

மற்றொரு இந்திய வீராங்கனையான கம்ரான் கௌர் மங்கோலிய வீராங்கனையை 6-1, 6-0 என நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார். 

ஆடவர் ஒற்றையர் டென்னிஸ்:

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரரான ராம்குமார் ராமநாத் 6-0, 7-6 என்ற நேர் செட் கணக்கில் ஹாங் காங் வீரரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 

மற்றொரு இந்திய வீரரான பிரஜ்னேஷ் இந்தோனேஷிய வீரரை 6-2, 6-0 என எளிதில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். 

மகளிர் இரட்டையர் டென்னிஸ்:

அன்கிதா ரெய்னா - பிரார்தனா தோம்பரே பாகிஸ்தான் ஜோடியை 6-0, 6-0 என மிக எளிதில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. 

ஆடவர் இரட்டையர் டென்னிஸ்:

ரோஹன் போபண்ணா - திவிஜ் சரண் ஜோடி இந்தோனேஷிய ஜோடியை 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர். 

ரோவிங் போட்டி:

இந்தியாவைச் சேர்ந்த துஷ்யந்த் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். 

செபாக் டக்ரோ போட்டி:

ஈரானை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. 

பதக்கப் பட்டியலில் 15 தங்கம், 12 வெள்ளி, 9 வெண்கலம் என 36 பதக்கங்களுடன் சீனா தொடர்ந்து முதலிடத்திலேயே நீடிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com