செபாக்டக்ரா: வெண்கலம் வென்று இந்திய அணி சாதனை!

ஆசியப் போட்டியில் செபாக்டக்ரா விளையாட்டில் இந்திய அணி வெண்கலம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளது...
செபாக்டக்ரா: வெண்கலம் வென்று இந்திய அணி சாதனை!

18-வது ஆசியப் போட்டிகள், இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் சனிக்கிழமை தொடங்கின.

ஆசியப் போட்டியில் செபாக்டக்ரா விளையாட்டில் இந்திய அணி வெண்கலம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளது. 

அரையிறுதியில் இந்திய அணி 0-2 என்கிற கணக்கில் நடப்பு சாம்பியன் தாய்லாந்திடம் தோல்வி அடைந்தது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் செபாக் டக்ரா விளையாட்டில் இந்திய அணி பெறும் முதல் பதக்கம் இது. இந்த விளையாட்டு, 1990 முதல் ஆசியப் போட்டியில் பங்கேற்கிறது. 1998 முதல் கடந்த 5 போட்டிகளாக தாய்லாந்து அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 

குரூப் பி பிரிவில் இந்திய அணி துவக்க ஆட்டத்தில் 2-1 என ஈரானை வென்றது. கடந்த 2017 ஆசிய சாம்பியன் போட்டியில் இந்திய ஆடவர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தது. இதையடுத்து ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளது. 

இந்திய மகளிர் அணி தனது முதல் ஆட்டத்தில் 0-3 என தென்கொரியாவிடம் தோல்வியுற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com