ஆசியப் போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்றார் 16 வயது செளரப்; அபிஷேக் வர்மாவுக்கு வெண்கலம்!

பதக்கப் பட்டியலில் இந்திய அணி 3 தங்கம் 2 வெள்ளி 2 வெண்கலத்துடன் 7-ம் இடத்தில் உள்ளது...
ஆசியப் போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்றார் 16 வயது செளரப்; அபிஷேக் வர்மாவுக்கு வெண்கலம்!

18-வது ஆசியப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின. 

இன்று நடைபெற்ற ஆடவருக்கான 10 மீ. ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் 16 வயது வீரர் செளரப் செளத்ரியும் அபிஷேக் வர்மாவும் தங்கம், வெண்கலம் என முறையே இரு பதக்கங்களைப் பெற்று அசத்தியுள்ளார்கள். 

இறுதிச்சுற்றில் இவ்விரு இந்திய வீரர்களும் ஜப்பானின் மட்சுடாவும் மோதினார்கள். அனுபவம் வாய்ந்த ஜப்பான் வீரருக்குக் கடும் சவால் அளித்த இளம் வீரர் செளரப், கடைசிக்கட்டத்தில் அதிகப் புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றார். அபிஷேக் வர்மா வெண்கலம் வென்றார்.

பதக்கப் பட்டியலில் இந்திய அணி 3 தங்கம் 2 வெள்ளி 2 வெண்கலத்துடன் 7-ம் இடத்தில் உள்ளது. சீன அணி 18 தங்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com