பிரேஸிலைக் காவு வாங்கிய சேம் சைட் கோலில் சாதனை நிகழ்த்தியுள்ள ரஷிய உலகக் கோப்பை!

1998-ல் ஆறு சேம் சைட் கோல்களும் 2015-ல் ஐந்து சேம் சைட் கோல்களும்தான் அடிக்கப்பட்டுள்ளன...
பிரேஸிலைக் காவு வாங்கிய சேம் சைட் கோலில் சாதனை நிகழ்த்தியுள்ள ரஷிய உலகக் கோப்பை!

ஒரு கால்பந்து உலகக் கோப்பை நடக்கும்போது அதிகபட்சமாக ஐந்து ஆறு சேம் சைட் கோல்கள் மட்டுமே அடிப்பது வழக்கம். அதற்கு மேல் யாரும் அடிக்கமாட்டார்கள். அடித்ததும் இல்லை.

ஆனால் இந்த உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் சேம் சைட் கோல்கள்தான் உள்ளன. 

ஆம். இதுவரை 11 சேம் சைட் கோல்கள் ரஷிய உலகக் கோப்பையில் அடிக்கப்பட்டுள்ளன. இது நம்பமுடியாத செய்தி.

இதற்கு முன்பு 1998-ல் ஆறு சேம் சைட் கோல்களும் 2015-ல் ஐந்து சேம் சைட் கோல்களும்தான் அடிக்கப்பட்டுள்ளன. இந்தமுறை இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காகிவிட்டது. 

ஆறாவது முறையாக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்கிற பிரேஸிலின் கனவு நேற்று தகர்ந்தது. பெல்ஜியம் அணி, பிரேஸிலை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து அரைறுதிக்கு முன்னேறியுள்ளது. அந்த அணி அரையிறுதியில் பிரான்ஸை எதிர்கொள்கிறது. பெல்ஜியம் அணி சேம் சைட் கோல் மூலமாக முன்னணி பெற்றது. கார்னரில் அடித்த பந்தை சேம் சைட் கோலாக மாற்றி பிரேஸில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினார் ஃபெர்னான்டினோ.  இது இந்த உலகக் கோப்பையின் 11-வது சேம் சைட் கோல்!

உலகக் கோப்பை வரலாற்றில் இது பிரேஸில் அணியின் 2-வது சேம் சைட் கோல். 2014-ல் பிரேஸிலின் மார்செலோ ஓன் கோல் அடித்தார். எனினும் குரோஸியாவுக்கு எதிரான அந்த ஆட்டத்தை 3-1 என வென்றது பிரேஸில். நேற்று அதுபோல அந்த அணியால் மாற்றத்தை உண்டுபண்ண முடியவில்லை.  சேம் சைட் கோலால் தோற்று போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com