எதன் அடிப்படையில் உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றுக்கு அணிகள் தேர்வாகின்றன? ஃபிஃபா விதிமுறைகள் என்ன?

இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட அணிகள் சம அளவிலான புள்ளிகளைக் கொண்டிருந்தால்...
எதன் அடிப்படையில் உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றுக்கு அணிகள் தேர்வாகின்றன? ஃபிஃபா விதிமுறைகள் என்ன?

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி ரஷியாவில் ஜூன் 14 முதல் தொடங்கியுள்ளன. மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் நடைபெறும் 64 ஆட்டங்களில் 32 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன.

மொத்தமுள்ள 8 பிரிவுகளில் இருந்து தலா இரு அணிகள் தேர்வாகி மொத்தம் 16 அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுகளில் போட்டியிடும். குரூப் ஏ மற்றும் பி பிரிவுகளில் மட்டும் அனைத்து அணிகளும் தலா 2 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. குரூப் சி, டி, இ, எஃப், ஜி, ஹெச் ஆகிய பிரிவுகளில் உள்ள அணிகள் தலா ஓர் ஆட்டத்தில் மட்டுமே பங்கேற்றுள்ளன.

இந்நிலையில் நேற்று வரையிலான ஆட்டங்களின் அடிப்படையில் இரு அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள லீக் ஆட்டங்கள் மூலம் 14 அணிகள் தேர்வாகவுள்ளன.

இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட அணிகள் சம அளவிலான புள்ளிகளைக் கொண்டிருந்தால் கீழ்க்கண்ட ஃபிஃபா விதிகளின் அடிப்படையில் நாக் அவுட் சுற்றுக்கு அணிகள் தேர்வு செய்யப்படும்.

1. மொத்தப் புள்ளிகள்
2. கோல்கள் வித்தியாசம்
3. கோல்களின் எண்ணிக்கை
4. நன்னடத்தைப் புள்ளிகள். (மஞ்சள் அட்டை = -1, மறைமுகமான சிவப்பு அட்டை (இரண்டாவது மஞ்சள் அட்டை) = -3, நேரடியான சிவப்பு அட்டை = -4, மஞ்சள் அட்டை மற்றும் நேரடியான சிவப்பு அட்டை = -5)
5.. குலுக்கல் முறை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com