நீயெல்லாம் சர்வர் வேலைக்குதான் லாயக்கு: முதல் கேலியை நினைவுகூர்ந்த ஃபெடரர்

நீயெல்லாம் சர்வீஸ் செய்றதுக்குப் பதிலா சர்வர் வேலைக்குப் போலாம் என்று தான் முதன்முதலில் கேலி செய்யப்பட்டதை ஃபெடரர் நினைவுகூர்ந்தார்.
நீயெல்லாம் சர்வர் வேலைக்குதான் லாயக்கு: முதல் கேலியை நினைவுகூர்ந்த ஃபெடரர்

ரோஜர் ஃபெடரர் (வயது 36), டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னன். சமகாலத்தில் டென்னிஸ் விளையாட்டை தெரிந்த அனைவருக்கும் மிகவும் பரிட்சயமான பெயர் ஃபெடரர். 

உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராகத் திகழ்பவர். பொதுவாக விளையாட்டுத்துறையில் வயது அதிகமாகும் போது திறனில் மங்கிவிடுவர். ஆனால் ஃபெடரருக்கு அது தலைகீழ் நிலை தான். ஒவ்வொரு வருடமும் தனது ஆட்டத்திறனை மேம்படுத்தி வருகிறார்.

தற்போது வரை 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனைப் படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் டென்னிஸ் விளையாட்டின் இன்னும் பல சாதனைகளுக்கும், விருதுகளுக்கும் சொந்தக்காரர்.

இந்நிலையில், இவர் சர்வர் வேலைக்குத்தான் லாயக்கு என்று ஒருவர் கூறினார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனாலும் அந்த கேலி தான் அவரின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட தாரக மந்திரமாம். 

தான் கேலி செய்யப்பட்டதை சமீபத்தில் ரோஜர் ஃபெடரர் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

என்னுடைய முதல் டென்னிஸ் தொடரின் போது, நீயெல்லாம் மைதானத்தில் சர்வீஸ் செய்றதுக்குப் பதிலா காஃபி ஷாப்பில் சர்வர் வேலைக்குப் போலாம். திறமை இல்லாத நீ எதற்கு டென்னிஸ் விளையாடுகிறாய் என்று என்னுடைய அப்போதைய பயிற்சியாளர் கேலி செய்தார்.

ஆனால், அந்தச் சொல் தான் எனது வாழ்க்கையை மாற்றியமைத்தது. என்னுள் புது வேகத்தை ஏற்படுத்தியது. கோபமும், ஆக்ரோஷமும் ஏற்பட்டு எனது மனநிலையை மாற்றியது. அந்த இரவு முதலே தீவிர பயிற்சியில் ஈடுபட்டேன்.

எங்கள் வீட்டின் தோட்டத்தில் சென்று பல நூறு தடவை பந்தை சுவற்றில் அடித்து பயிற்சி செய்வேன். ஃபோர்ஹேன்ட், பேக்ஹேன்ட் என அனைத்து நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டேன். 

நான் ஒரு செயலைச் சரியாகச் செய்கிறேன் என்கிற உணர்வு ஏற்படும் வரை தீவிரமாக பயிற்சி செய்தேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com