வினய் குமார் சாதனையை தகர்க்க சாஹலுக்கு அறிய வாய்ப்பு: பெங்களூரு பந்துவீச்சு தேர்வு

11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் 11-ஆவது லீக் ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. 
வினய் குமார் சாதனையை தகர்க்க சாஹலுக்கு அறிய வாய்ப்பு: பெங்களூரு பந்துவீச்சு தேர்வு

11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் 11-ஆவது லீக் ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதுவரை இவ்விரு அணிகளும் 16 முறை மோதியுள்ளன. அவற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் 8 முறையும், ராயல்ஸ் 7 முறையும் வென்றுள்ளன. 

ராயல் சேலஞ்சர்ஸ் நட்சத்திர வீரர் டி வில்லியர்ஸ் ராயல்ஸுக்கு எதிராக அதிகபட்சமாக 13 இன்னிங்ஸ்களில் 485 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சம் 79* ஆகும். இதில் 6 அரைசதங்களும் அடங்கும். ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக ஒருவர் எடுத்துள்ள அதிகபட்ச ரன்கள் இதுவாகும்.

யசூவேந்திர சாஹல் 71 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இன்னும் 2 விக்கெட்டுகள் கூடுதலாக வீழ்த்தினால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் வினய் குமாரை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடிப்பார்.

இரு அணி வீரர்களின் விவரம் பின்வருமாறு:

ராஜஸ்தான் ராயல்ஸ்:

அஜிங்க்ய ரஹானே (கேப்டன்), டி ஆர்கி ஷார்ட், பென் ஸ்டோக்ஸ், சஞ்சூ சாம்சன், ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ராகுல் திரிபாதி, கே.கௌதம், ஷ்ரேயாஸ் கோபால், தாவல் குல்கர்னி, ஜயதேவ் உனாட்கட், பென் லாஃப்லின்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), பிரண்டன் மெக்கல்லம், விராட் கோலி (விக்கெட் கீப்பர்), ஏபி டி வில்லியர்ஸ், மன்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் வோக்ஸ், பவன் நேகி, குல்வந்த் கெஜ்ரோலியா, உமேஷ் யாதவ், யசூவேந்திர சாஹல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com