ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: முதல் மூன்று ஆட்டங்களிலேயே சாதித்துள்ள, சறுக்கியுள்ள அணிகள்!

நடப்பு சாம்பியனாக இருந்தாலும் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது...
ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: முதல் மூன்று ஆட்டங்களிலேயே சாதித்துள்ள, சறுக்கியுள்ள அணிகள்!

கடந்த 7-ம் தேதி ஐபிஎல் போட்டி தொடங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸ் அணியும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. பரபரப்பான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. 

11-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப். 7-ம் தேதி தொடங்கி 51 நாள்கள் நடக்கிறது. மொத்தம் 60 போட்டிகளில் மும்பை இண்டியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், தில்லி டேர் டெவில்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்க்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளிட்ட அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் தற்போது 8 அணிகளும் தலா மூன்று ஆட்டங்கள் விளையாடியுள்ளன. இதில் ஹைதரபாத் அணி மட்டும் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. இதனால் அந்த அணி பிளேஆஃப்-பில் பங்குபெறும் என்கிற எதிர்பார்ப்பு தற்போது நிலவுகிறது. சென்னை, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய அணிகள் தலா 2 வெற்றிகளுடன் அடுத்த மூன்று இடங்களில் பங்கு வகிக்கின்றன. இதற்கடுத்த நிலையில் கொல்கத்தா, பெங்களூர், தில்லி ஆகிய அணிகள் தலா 1 வெற்றி மட்டும் பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடங்களை வகிக்கின்றன. மூன்றில் ஒன்றில் கூட வெற்றி பெறாத மும்பை அணி 8-ம் இடத்தில் உள்ளது. இதனால் அந்த அணி நடப்பு சாம்பியனாக இருந்தாலும் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இது ஆரம்பக்கட்டம்தான். கடைசி ஏழு, எட்டு ஆட்டங்களில் விஸ்வரூபம் எடுத்த அணிகள் கதைகளை நாம் கண்டுள்ளோம். எனவே ஐபிஎல்-லில் இன்னும் பல திருப்பங்களை வரும்வாரங்களில் நாம் பார்க்கலாம்.

ஐபிஎல் 2018 - புள்ளிகள் பட்டியல்

வரிசை எண் அணிகள்ஆட்டங்கள்வெற்றிகள்தோல்விகள்புள்ளிகள்நெட் ரன்ரேட்
 1. ஹைதரபாத்  3 3 0 6 0.772
 2. பஞ்சாப் 3 2 1 4 0.116
 3. சென்னை 3 2 1 4 0.103
 4. ராஜஸ்தான் 3 2 1 4 -0.247
 5. கொல்கத்தா 3 1 2 2 -0.051
 6. பெங்களூர் 3 1 2 2 -0.373
 7. தில்லி 3 1 2 2 -0.461
 8. மும்பை 3 0 3 0 -0.174

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com