5 ஆயிரம் ரன்களை நெருங்கும் விராட் கோலி பந்துவீச்சு தேர்வு

இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். 
5 ஆயிரம் ரன்களை நெருங்கும் விராட் கோலி பந்துவீச்சு தேர்வு

11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் 14-ஆவது லீக் ஆட்டம் மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் மும்பை இன்டியன்ஸ், ராயல் சேலஞ்சரஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். 

இதுவரை இவ்விரு அணிகளும் 21 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் மும்பை 13 முறையும், பெங்களூரு 8 முறையும் வென்றுள்ளன. அதுபோல வான்கடே மைதானத்தில் மோதிய 7 போட்டிகளில் மும்பை 4 முறையும், பெங்களூரு 3 முறையும் வெற்றிபெற்றுள்ளன.

ஏபி டி வில்லியர்ஸ் விக்கெட்டை தனக்கு எதிராக விளையாடிய 4 இன்னிங்ஸ்களிலும் க்ருணால் பாண்டியா வீழ்த்தியுள்ளார். கடந்த 3 முறை இவ்விரு அணிகளும் போட்டியிட்ட போது விராட் கோலி விக்கெட்டை மெக்லனேகன் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக மும்பை வீரர் பொல்லார்ட் மொத்தம் 450 ரன்கள் குவித்துள்ளார். ஆனால், கடந்த 3 முறையும் அவர் பெங்களூரு வீரர் சாஹல் பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்துள்ளார்.

இன்னும் 49 ரன்கள் எடுத்தால் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஒரு அணிக்காக 5 ஆயிரம் ரன்கள் குவித்த மைல்கல்லை எட்டும் வாய்ப்பு விராட் கோலிக்கு ஏற்பட்டுள்ளது. இதுவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 158 இன்னிங்ஸ்களில் களமிறங்கி 4,951 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 37.50 மற்றும் ஸ்டிரைக் ரேட் 131.53 ஆகும். 

அதுபோல 4 விக்கெட்டுகள் வீழ்த்தினால் ஐபிஎல் வரலாற்றில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய 5-ஆவது வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை உமேஷ் யாதவ் பெறுவார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com