சொதப்பும் மில்லினியர்கள்: பரிதவிக்கும் ஐபிஎல் அணிகள்!

அதிக விலைக்கு ஏலத்தில் தேர்வான வீரர்கள் சொதப்பி வருவதால் செய்வதறியாமல் தவிக்கின்றன அணிகள்...
சொதப்பும் மில்லினியர்கள்: பரிதவிக்கும் ஐபிஎல் அணிகள்!

இந்த ஐபிஎல் போட்டியில் அதிக விலைக்கு ஏலத்தில் தேர்வான வீரர்கள் சொதப்பி வருவதால் செய்வதறியாமல் தவிக்கின்றன அணிகள்.

கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்குத் தேர்வான வீரர்கள்: 

பென் ஸ்டோக்ஸ் - ரூ. 12.50 கோடி
ஜெயதேவ் உனாட்கட் - ரூ. 11.50 கோடி
மனீஷ் பாண்டே - ரூ. 11 கோடி
கேஎல் ராகுல் - ரூ. 11 கோடி
கிறிஸ் லின் - ரூ. 9.60 கோடி

இவர்களில் கேஎல் ராகுலைத் தவிர இதர நான்கு வீரர்களும் ஐபிஎல்-லில் மோசமாக விளையாடி வருவதால் ஐபிஎல் அணிகள் தங்கள் திட்டங்களை மாற்றவேண்டிய கட்டாயத்தில் உள்ளன. 

பென் ஸ்டோக்ஸ்

4 ஆட்டங்களில் 62 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மேலும் 4 ஆட்டங்களில் 8 ஓவர்கள் மட்டுமே வீசி 1 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார். எகானமி - 9.75.

ஆல்ரவுண்டராக அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சொதப்பி வருகிறார் ஸ்டோக்ஸ். இதனால் ராஜஸ்தான் அணிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஜெயதேவ் உனாட்கட்

மற்றொரு ராஜஸ்தான் வீரர். 11.50 கோடிக்கு தேர்வான உனாட்கட் 4 ஆட்டங்களில் 11 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். எகானமி - 11.00. இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் திறமையை வெளிப்படுத்தினால் அது ஐபிஎல் அணிகளுக்குப் பெரிய பலத்தை கொடுக்கும். உதாரணம் - புவனேஸ்வர் குமாரால் பலன் பெறும் ஹைதரபாத் அணி. இந்நிலையில் பெரும்தொகைக்குத் தேர்வாகி மோசமான பந்துவீச்சால் அதிக விமரிசனத்துக்கு ஆளாகியுள்ளார் உனாட்கட்.

மனீஷ் பாண்டே

இந்திய அணியில் விளையாடி வருவதால் ரூ. 11 கோடிக்கு ஏலத்தில் அவரைத் தேர்வு செய்தது ஹைதரபாத் அணி. அந்த அணி ஐபிஎல்-லில் சிறப்பாக விளையாடினாலும் இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள பாண்டே, 15 ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார். 

கிறிஸ் லின்

ஐபிஎல் ஏலத்தில் லின், ரூ. 9.60 கோடிக்கு கொல்கத்தா அணிக்குத் தேர்வானபோது பரபரப்பு ஏற்பட்டது. இதர டி20 போட்டிகளில் அசத்தும் லின், ஐபிஎல்-லிலும் ரசிகர்களை மகிழ்விப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 5 ஆட்டங்களில் 107 ரன்கள் எடுத்துள்ளார் லின். ஒரு இன்னிங்ஸில் 49 ரன்கள் எடுத்தவர் இதர 4 ஆட்டங்களில் ஏமாற்றமளித்துள்ளார். அவருக்கென்று ஒரு மதிப்பு உள்ளது. அதற்கு இந்த ரன்கள் போதாது. 

கேஎல் ராகுல்

ஏலத்தில் ரூ. 11 கோடிக்கு பஞ்சாப் அணி தேர்வு செய்தபோது பலருக்கும் ஆச்சர்யம் ஏற்பட்டது. ஆனால் தன்னுடைய திறமையை மேலும் நிரூபித்துள்ளார் ராகுல். 3 ஆட்டங்களில் 135 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 198.52. இதுவரை 8 சிக்ஸர்கள் அடித்துள்ளார். 3 ஆட்டங்கள் மட்டுமே ஆடிய வீரர்களில் இவர்தான் அதிக ரன்கள் எடுத்துள்ளார். பஞ்சாப் அணி ஆடிய 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற்றதற்கு ராகுல் முக்கியக் காரணம்.

ஐபிஎல் 2018 - புள்ளிகள் பட்டியல்

வரிசை எண் அணிகள்ஆட்டங்கள்வெற்றிகள்தோல்விகள்புள்ளிகள்நெட் ரன்ரேட்
 1.  கொல்கத்தா  5 3 2 6 0.825
 2 ஹைதரபாத்  3 3 0 6 0.772
 3. பஞ்சாப் 3 2 1 4 0.116
 4. சென்னை 3 2 1 4 0.103
 5. ராஜஸ்தான் 4 2 2 4 -0.366
 6. மும்பை 4 1 3 2 0.445
 7. பெங்களூர் 4 1 3 2 -0.861
 8. தில்லி 4 1 3 2 -1.399

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com