டாஸ் வென்ற விராட் கோலி மேட்ச் வெல்வாரா? டேர்டெவில்ஸ் முதல் பேட்டிங்

டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக விராட் கோலி அதிகபட்சமாக 16 இன்னிங்ஸ்களில் பங்கேற்று மொத்தம் 661 ரன்கள் குவித்துள்ளார். இதில் 7 அரைசதங்கள் அடங்கும்.
டாஸ் வென்ற விராட் கோலி மேட்ச் வெல்வாரா? டேர்டெவில்ஸ் முதல் பேட்டிங்

11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகளின் 18-ஆவது லீக் ஆட்டம் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதுவரை இவ்விரு அணிகளும் 19 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. அதில் பெங்களூரு 11 முறையும், டெல்லி 6 முறையும் வென்றுள்ளன, ஒரு போட்டி டை மற்றும் ஒரு போட்டிக்கு முடிவில்லை. பெங்களூருவில் நடந்த போட்டிகளில் இரு அணிகளும் தலா 3 வெற்றிகளைப் பெற்றுள்ளன. இதில் 1 போட்டி டை மற்றும் 1 போட்டிக்கு முடிவில்லை.

டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக விராட் கோலி அதிகபட்சமாக 16 இன்னிங்ஸ்களில் பங்கேற்று மொத்தம் 661 ரன்கள் குவித்துள்ளார். இதில் 7 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சம் 99 ஆகும். அதுபோல் ராயல் சேலஞ்சர்ஸுக்கு எதிராக கம்பீர் 19 இன்னிங்ஸ்களில் விளையாடி மொத்தம் 644 ரன்கள் குவித்துள்ளார். 

ஐபிஎல் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்த உமேஷ் யாதவுக்கு இன்னும் 2 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுகிறது.

இரு அணிகளின் வீரர்கள் விவரம் பின்வருமாறு:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), மனன் வோஹ்ரா, விராட் கோலி (கேப்டன்), ஏபி டி வில்லியர்ஸ், மன்தீப் சிங், கோரி ஆண்டர்சன், வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் வோக்ஸ், உமேஷ் யாதவ், முகமது சிராஜ், சாஹல்.

டெல்லி டேர்டெவில்ஸ்:

கௌதம் கம்பீர் (கேப்டன்), ஜேசன் ராய், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), கிளென் மேக்ஸ்வெல், ராகுல் டீவாடியா, விஜய் ஷங்கர், கிறிஸ் மோரீஸ், ஷபாஸ் நதீம், ஹர்ஷல் படேல், ட்ரெண்ட் போல்ட்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com