தோனி, ராயுடுவின் அதிரடி சிக்ஸர்களால் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறிய சிஎஸ்கே!

கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவை என்ற நிலையில் பிராவோ, தோனி ஆகியோர் அதிரடியாக சிக்ஸர் அடித்து.. 
தோனி, ராயுடுவின் அதிரடி சிக்ஸர்களால் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறிய சிஎஸ்கே!

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் சென்னை அணி அபாரமாக ஆடி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே ஆன ஐபிஎல் 24-வது ஆட்டம் பெங்களூருவில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.  டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்களை குவித்தது. சென்னை அணி தரப்பில் தாகுர், தாஹிர், பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

சென்னை அணி சார்பில் கேப்டன் தோனி-அம்பதி ராயுடு இணை பெங்களூரு அணி பந்துவீச்சை பதம் பார்த்தனர். ராயுடு 8 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 53 பந்துகளில் 82 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 19-வது ஓவரை சிராஜ் வீசினார். அதில் தோனி ஒரு சிக்ஸரை விளாசினார். 3 வைடு பந்துகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த ஓவரில் சென்னை அணி 14 ரன்களை பெற்றது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவை என்ற நிலையில் பிராவோ, தோனி ஆகியோர் அதிரடியாக சிக்ஸர் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தனர். இறுதியாக 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்களுடன் சென்னை வெற்றி பெற்றது. பெங்களூரு தரப்பில் சஹால்2 விக்கெட்டுகளையும், பவன் நேகி, உமேஷ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ஐபிஎல்-லின் ஆரம்பக்கட்டத்தில் ஹைதராபாத் அணி முதலிடத்தில் இருந்தது. இதன்பிறகு சென்னையும் பஞ்சாப்பும் மாறிமாறி முதலிடத்தைப் பிடித்து வருகின்றன. இந்நிலையில் நேற்றைய வெற்றியினால் சென்னை அணி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 6 ஆட்டங்களில் சென்னையும் பஞ்சாப்பும் 5 ஆட்டங்களில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் சமமாக இருந்தாலும் நெட் ரன்ரேட் அடிப்படையில் சென்னை அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. சென்னை அணி மீதமுள்ள 8 ஆட்டங்களில் மூன்றில் வென்றாலே 8 வெற்றிகளுடன் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறமுடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com