மாரத்தான் போராட்டத்தில் 97 வருடங்களுக்குப் பிறகு விம்பிள்டன் இறுதியில் நுழைந்த தென் ஆப்பிரிக்க வீரர்

தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன், விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டிக்கு வெள்ளிக்கிழமை தகுதி பெற்றார்.
மாரத்தான் போராட்டத்தில் 97 வருடங்களுக்குப் பிறகு விம்பிள்டன் இறுதியில் நுழைந்த தென் ஆப்பிரிக்க வீரர்

தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன், விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டிக்கு வெள்ளிக்கிழமை தகுதி பெற்றார்.

விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் மற்றும் அமெரிக்காவின் ஜான் இஸ்னர் பலப்பரீட்சை நடத்தினர். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த மாரத்தான் ஆட்டத்தில் கெவின் ஆண்டர்சன் (வயது 32) வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார்.

6 மணி நேரம் 35 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் 7-6 (8-6) 6-7 (5-7) 6-7 (9-11) 6-4 26-24 என்ற 5 செட் கணக்கில் கெவின் வெற்றிபெற்றுள்ளார். அதிலும் கடைசி செட் ஆட்டம் மட்டும் 2 மணிநேரங்கள் 50 நிமிடங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. விம்பிள்டன் வரலாற்றிலேயே அதிக நேரம் நடைபெற்ற 2-ஆவது மிகப் பெரிய போட்டியாகவும் இது அமைந்தது. மேலும் டென்னிஸ் வரலாற்றிலேயே அதிக நேரம் நடைபெற்ற 3-ஆவது மிகப்பெரிய ஆட்டமாகும்.

அதுபோல விம்பிள்டன் அரையிறுதியில் நடைபெற்ற மிக நீண்ட நேர போட்டி என்ற சாதனையையும் படைத்தது. முன்னதாக, 2013-ல் நோவாக் ஜோகோவிச், ஜூவான் மார்டின் டெல் போர்டோ ஆகியோருக்கு இடையில் 4 மணிநேரம் 44 நிமிடங்கள்  நடைபெற்ற ஆட்டமே மிக நீண்ட நேரமாக இருந்துள்ளது.

இருப்பினும், 8 நிமிடங்களில் மற்றொரு வாய்ப்பை இப்போட்டி நழுவ விட்டுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற டேவிஸ் கோப்பை தொடரில் ஆர்ஜென்டீனாவின் லியோனார்டோ மேயர் மற்றும் பிரேசிலின் ஜாவோ சௌஸா ஆகியோருக்கு இடையிலான முதல் சுற்று ஆட்டம் 6 மணி நேரம் 43 நிமிடங்கள் நடைபெற்றுள்ளது.

இதையடுத்து சுமார் 97 வருட இடைவெளிக்குப் பின்னர் தற்போது தான் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வீரர் விம்பிள்டன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். முன்னதாக, 1921-ஆம் ஆண்டு பிரையன் நார்டன், விம்பிள்டன் இறுதிப்போட்டியில் விளையாடியவர் ஆவார்.

இந்நிலையில், முன்னணி வீரர்களான ரஃபேல் நடால் அல்லது நோவாக் ஜோகோவிச் ஆகிய இருவருக்கும் இடையிலான ஆட்டத்தில் வெற்றிபெறுபவருடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் கெவின் ஆண்டர்சன் மோதவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com