இந்திய அணியின் சாதனைத் துளிகள்

இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பல புதிய சாதனைகளைப் படைத்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு...
இந்திய அணியின் சாதனைத் துளிகள்

இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டி பெங்களூருவில் வியாழக்கிழமை தொடங்கியது. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆப்கானிஸ்தான் தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது.

இதில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. மேலும் இரண்டே நாட்களில் இந்தப் போட்டியும் நிறைவடைந்தது. அதிலும் குறிப்பாக 2-ஆம் நாள் ஆட்டத்திலேயே ஆப்கானிஸ்தான் அணி இரு இன்னிங்ஸ்களிலும் ஆட்டமிழந்துள்ளது.

இந்நிலையில், இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பல புதிய சாதனைகளைப் படைத்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:

  • 2002-ஆம் ஆண்டு ஷார்ஜாவில் நடைபெற்ற பாகிஸ்தான், ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டிக்கு அடுத்தபடியாக ஆசியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் குறைந்தபட்ச பந்துகளில் (மொத்தம் 893 பந்துகள்) முடிக்கப்பட்ட 2-ஆவது டெஸ்ட் இதுவாகும்.

இந்தியா பெற்ற மிகப்பெரிய இன்னிங்ஸ் வெற்றிகள்:

  • ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள், பெங்களூரு, 2018*
  • வங்கதேசத்துக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள், மிர்பூர், 2007
  • இலங்கைக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள், நாக்பூர், 2017
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 219 ரன்கள், கொல்கத்தா, 1998

வெற்றிபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியால் வீசப்பட்ட குறைந்தபட்ச பந்துகள்:

  • 399 v ஆப்கானிஸ்தான், பெங்களூரு, 2018*
  • 554 v ஆஸ்திரேலியா, மும்பை, 2004
  • 569 v வங்கதேசம், தாகா, 2007
  • 596 v ஜிம்பாப்வே, ஹராரே, 2005

இந்திய அணிக்கு எதிராக இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து எதிரணியால் அடிக்கப்பட்ட குறைந்தபட்ச ரன்கள்:

  • 212 ஆப்கானிஸ்தான், பெங்களூரு, 2018*
  • 230 இங்கிலாந்து, லீட்ஸ், 1986
  • 241 நியூஸிலாந்து, ஆக்லாந்து, 1968
  • 242 இங்கிலாந்து, லார்ட்ஸ், 1936
  • 254 நியூஸிலாந்து, ஹாமில்டன், 2002

டெஸ்ட் போட்டியில் ஒரே நாளில் வீழ்த்தப்பட்ட அதிகபட்ச விக்கெட்டுகள்:

  • 27 இங்கிலாந்து v ஆஸ்திரேலியா, லார்ட்ஸ், 1888 (2-ஆம் நாள்)
  • 25 ஆஸ்திரேலியா v இங்கிலாந்து, மெல்போர்ன், 1902 (முதல் நாள்)
  • 24 இங்கிலாந்து v ஆஸ்திரேலியா, ஓவல், 1896 (2-ஆம் நாள்)
  • 24 இந்தியா v ஆப்கானிஸ்தான், பெங்களூரு, 2018 (2-ஆம் நாள்)*

அறிமுக டெஸ்ட் போட்டியில் குறைந்தபட்ச ரன்கள் எடுத்த அணிகள்:

  • 84 தென் ஆப்பிரிக்கா v இங்கிலாந்து, போர்ட் எலிசபத், 1889 (முதல் இன்னிங்ஸ்)
  • 91 வங்கதேசம் v இந்தியா, தாகா, 2000 (2-ஆவது இன்னிங்ஸ்)
  • 103 ஆப்கானிஸ்தான் v இந்தியா, பெங்களூரு, 2018 (2-ஆவது இன்னிங்ஸ்)
  • 104 ஆஸ்திரேலியா v இங்கிலாந்து, மெல்போர்ன், 1877 (2-ஆவது இன்னிங்ஸ்)
  • 108 இங்கிலாந்து v ஆஸ்திரேலியா, மெல்போர்ன், 1877 (2-ஆவது இன்னிங்ஸ்)
  • 109 ஆப்கானிஸ்தான் v இந்தியா, பெங்களூரு, 2018 (முதல் இன்னிங்ஸ்)
  • 112 நியூஸிலாந்து v இங்கிலாந்து, கிறைஸ்ட்சர்ச், 1930 (முதல் இன்னிங்ஸ்)

அறிமுக போட்டியில் குறைந்த ஓவர்கள் பேட்டிங் செய்த அணிகள்:

  • 27.5 ஆப்கானிஸ்தான் v இந்தியா, பெங்களூரு, 2018 (முதல் இன்னிங்ஸ்)
  • 38.4 ஆப்கானிஸ்தான் v இந்தியா, பெங்களூரு, 2018 (2-ஆவது இன்னிங்ஸ்)
  • 46.3 வங்கதேசம் v இந்தியா, தாகா, 2000 (2-ஆவது இன்னிங்ஸ்)
  • 47.1 நியூஸிலாந்து v இங்கிலாந்து, கிறைஸ்ட்சர்ச், 1930 (முதல் இன்னிங்ஸ்)
  • 47.2 அயர்லாந்து v பாகிஸ்தான், மலஹைட், 2018 (முதல் இன்னிங்ஸ்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com