எங்கள் முதல் இலக்கு எலிமினேட்டர் சுற்றுக்கு முன்னேறுவது: தோனி பேட்டி

எங்கள் முதல் இலக்கு எலிமினேட்டர் சுற்றுக்கு முன்னேறி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவதுதான். எனவே இனிவரும் காலம் மிகவும் குறைவு என்பதால் இதில் தவறுகள் ஏற்படும் விதமாக நடக்கக் கூடாது.
எங்கள் முதல் இலக்கு எலிமினேட்டர் சுற்றுக்கு முன்னேறுவது: தோனி பேட்டி

சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது. இதுகுறித்து சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறியதாவது:

சாம் பில்லிங்ஸுக்கு ஓய்வு தேவைப்பட்டது, எனவே டூ பிளெஸிஸ்ஸை அணியில் சேர்த்தோம். இதனால் ராயுடு நடுவரிசையில் களமிறங்க நேர்ந்தது. இருப்பினும் அது நடுவரிசையை மேலும் பலப்படுத்திவிட்டது. ராயுடு எந்த நிலையிலும் பேட் செய்யக்கூடியவர். இதில் கூடுதலாக ஒரு வேகப்பந்துவீச்சாளரை சேர்க்க விரும்பினோம். எனவே லுங்கி நிகிடி களமிறங்கினார். தென் ஆப்பிரிக்க தொடரில் இருந்தே அவர் என்னை மிகவும் கவர்ந்துவிட்டார். இனிவரும் போட்டிகளிலும் அவர் இதே போன்று செயல்பட்டால் சிறப்பாக இருக்கும். 

எங்கள் முதல் இலக்கு எலிமினேட்டர் சுற்றுக்கு முன்னேறி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவதுதான். எனவே இனிவரும் காலம் மிகவும் குறைவு என்பதால் இதில் தவறுகள் ஏற்படும் விதமாக நடக்கக் கூடாது. சரியாக அமையாதவைகளில் நன்றாகப் பயிற்சி செய்வது அவசியம். ஒட்டுமொத்தமாக நாங்கள் அனைவரும் ஒரு அணியாக மகிழ்ச்சியாக உள்ளோம். இருப்பினும், வெற்றிகளும், தோல்விகளில் பாடங்களும் தான் நம்மை சிறப்பாக வைத்திருக்க உதவும். இந்த தொடரில் பந்துவீச்சு சரிவர அமையவில்லை. எனவே பந்துவீச்சாளர்கள் தங்களை தயாராக வைத்திருக்க வேண்டும். 

எனது முதுகுவலி முழுமையாக குணமடையவில்லை. இருப்பினும் அதை சமாளிக்கும் நிலையில் தான் இருக்கிறேன். இடையில் சரியான ஓய்வு இல்லாத காரணத்தால் தான் வலி இன்னும் முழுவதும் குணமடையலில்லை. இதனாலேயே அதிகளவில் பயிற்சியும் மேற்கொள்வதில்லை. நான் 4 அல்லது 5-ஆவது வரிசையில் களமிறங்க வேண்டுமென்றால் அதற்கு துவக்க வீரர்கள் சிறப்பான அடித்தளத்தை அமைக்க வேண்டும். கீழ்வரிசையில் ஆடும் போது நாம் எப்போது தாக்குதல் ஆட்டம் ஆடுவோம் என பந்துவீச்சாளர்கள் நினைக்காத போது அதை செயல்படுத்த வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com