யாருடைய கதை இன்றுடன் முடியப்போகிறது? வாழ்வா சாவா ஆட்டத்தில் மும்பை - பெங்களூர் மோதல்!

பெங்களூருவில் இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை - பெங்களூர் அணிகள் மோதுகின்றன...
யாருடைய கதை இன்றுடன் முடியப்போகிறது? வாழ்வா சாவா ஆட்டத்தில் மும்பை - பெங்களூர் மோதல்!

பெங்களூருவில் இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை - பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் 7 ஆட்டங்களில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளன. 

கடந்த சனியன்று, சென்னை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தி தனது தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது. சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை எடுத்தது. மும்பை அணி, 19.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு மும்பை அணி 173 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் 56 ரன்களைக் குவித்தார். இந்த வெற்றி மூலம் மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் 6-ஆம் இடத்துக்கு முன்னேறியது.

அடுத்தநாள் நடைபெற்ற ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது. 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள பெங்களூருக்கு இது 5-ஆவது தோல்வி. முதலில் பேட் செய்த பெங்களூரு 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா 20-ஆவது ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்து வென்றது.

உண்மையில் 175 ரன்கள், நல்ல ஸ்கோர் என்று நினைத்தேன். எப்போது அப்படி நினைத்தோமோ, அப்போதே நாங்கள் வெற்றி பெற தகுதியானவர்களாக இல்லை. ஃபீல்டிங்கில் மிகவும் தடுமாறினோம் என்று தோல்விக்குப் பிறகு பேட்டியளித்தார் கோலி.

ஐபிஎல் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற குறைந்தபட்சம் 8 வெற்றிகளாவது தேவை. 7 வெற்றிகளுடன் கூட பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறமுடியும். ஆனால் அதற்கு நெட் ரன்ரேட் ஒத்துழைக்கவேண்டும். 7 வெற்றிகளுடன் பல அணிகள் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறாமல் இருந்துள்ளன. ஆனால், 8 வெற்றிகள் பெற்ற அனைத்து அணிகளும் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற்றுள்ளன. எனவே 8 புள்ளிகளை அடையத்தான் அனைத்து அணிகளும் முயற்சி செய்யும்.

இதன்படி பார்த்தால் இந்த இரு அணிகளும் மீதமுள்ள 7 ஆட்டங்களில் 6-ல் வென்றால் மட்டுமே பிளேஆஃப்-புக்குத் தகுதிபெறமுடியும். அப்படிச் செய்தால் தான் கைவசம் 8 வெற்றிகள் இருக்கும். எனவே இன்று தோற்கும் அணி அடுத்ததாக விளையாடவுள்ள ஆறிலும் வெற்றி பெறவேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்படும். இது மிகவும் சிரமமான காரியம். எனவே இன்று தோல்வியடையும் அணி ஐபிஎல் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறுவது மிக மிகக் கடினம். இப்படியொரு சிக்கலான கட்டத்தில், வாழ்வா சாவா ஆட்டத்தில் இரு அணிகளும் இன்று மோதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com