ஒரே நாளில் மூன்று இடங்கள் முன்னேறிய மும்பை! இதர அணிகள் கலக்கம்!

ஐபிஎல் லீக் ஆட்டங்களின் கடைசிக்கட்டம் மேலும் சுவாரசியமாகவும் பரபரப்பாகவும் இருக்கும் என.. 
ஒரே நாளில் மூன்று இடங்கள் முன்னேறிய மும்பை! இதர அணிகள் கலக்கம்!

பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியது. இதனால் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் 5-ம் இடம் பிடித்துள்ளது.

மும்பை இண்டியன்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணிகள் இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் 34-வது ஆட்டம் வெள்ளிக்கிழமை இரவு இந்தூரில் நடைபெற்றது. முன்னதாக டாஸ் வென்ற மும்பை பீல்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் அணி 174 ரன்களை எடுத்திருந்தது. மும்பை தரப்பில் மெக்ளேனகன், பும்ரா, பாண்டியா, மார்கண்டே, கட்டிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை, ரோஹித்-க்ருணால் பாண்டியா இணை பஞ்சாப் அணியின் பந்துவீச்சை எதிர்கொண்டு துரிதமாக ரன்களை சேர்த்தது. ரோஹித் 24 ரன்களுடனும், க்ருணால் பாண்டியா 31 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 4 விக்கெட் இழப்புக்கு மும்பை அணி 176 ரன்களை எடுத்து ஒரு ஓவர் மீதமிருக்கையில் வெற்றி பெற்றது. பஞ்சாப் தரப்பில் முஜிப்பூர் ரஹ்மான் 2 விக்கெட்டையும், ஸ்டாய்னிஸ், டை தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்த ஒரு வெற்றியால் நேற்று கடைசி இடத்தில் இருந்த மும்பை, 5-ம் இடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளது. மும்பை, பெங்களூர், தில்லி, ராஜஸ்தான் என நான்கு அணிகளும் 6 புள்ளிகளைக் கொண்டிருந்தாலும் நெட்ரன்ரேட் அடிப்படையில் மும்பை 5-ம் இடத்தில் உள்ளது. 

பிளேஆஃப் கடினம் என்று சொல்லப்பட்ட அணிகளில் முக்கியமானது மும்பை இந்தியன்ஸ். ஆனால் சமீபத்திய வெற்றிகளின்மூலம் அந்த அணி 3 வெற்றிகளுடன் 5-ம் இடத்தைப் பிடித்திருப்பதால் இதர அணிகளுக்குக் கலக்கம் ஏற்பட்டுள்ளன. மும்பையின் வெற்றிகள் இதர அணிகளின் பிளேஆஃப் வாய்ப்பைத் தடுப்பதாக உள்ளது. இதனால் ஐபிஎல் லீக் ஆட்டங்களின் கடைசிக்கட்டம் மேலும் சுவாரசியமாகவும் பரபரப்பாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் 2018 - புள்ளிகள் பட்டியல்

 வரிசை   எண் அணிகள் ஆட்டங்கள்  வெற்றிகள் தோல்விகள்  புள்ளிகள்  நெட்   ரன்ரேட் 
 1. ஹைதராபாத்  8 6 2 12 0.514
 2.  சென்னை  9 6 3 12 0.354
 3. கொல்கத்தா 9 5 4 10 0.240
 4. பஞ்சாப் 8 5 3 10 0.130
 5. மும்பை 9 3 6 6 0.005
 6. பெங்களூர் 8 3 5 6 -0.301
 7. தில்லி 9 3 6 6 -0.450
 8. ராஜஸ்தான் 8 3 5 6 -0.726

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com