சிறந்த பந்துவீச்சை சிதறடித்த அம்பட்டி ராயுடு: சாதனைப் புள்ளிவிவரங்கள்!

அம்பட்டி ராயுடு தலா 7 சிக்ஸர், பவுண்டரியுடன் 62 பந்துகளில் 100 ரன்களை எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல்...
சிறந்த பந்துவீச்சை சிதறடித்த அம்பட்டி ராயுடு: சாதனைப் புள்ளிவிவரங்கள்!

ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சென்னை அணி தனது பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளது. 

முதலில் ஆடிய ஹைதராபாத் 4 விக்கெட்டை இழந்து 179 ரன்களை எடுத்தது. அதன் ஷிகர் தவன் 79, கேன் வில்லியம்ஸன் 51 ரன்களை குவித்தனர். பின்னர் ஆடிய சென்னை அணி 2 விக்கெட்டை இழந்து 180 ரன்களை எடுத்து வென்றது. அம்பட்டி ராயுடு 100, வாட்சன் 57, தோனி 20 ரன்களை எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி தனது பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்தது. ஹைதராபாத் அணியும் ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்து விட்டது.

தொடக்க வீரர் அம்பட்டி ராயுடு தலா 7 சிக்ஸர், பவுண்டரியுடன் 62 பந்துகளில் 100 ரன்களை எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடைய சதம் தொடர்புடைய புள்ளிவிவரங்கள்:

* மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களைக் கொண்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக இந்த வருடம் மட்டுமே மூன்று சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. என்னவொரு முரண்!

128* ரிஷப் பண்ட், தில்லி, 2018
104* கிறிஸ் கெயில், மொஹலி, 2018
100* மெக்கல்லம், சென்னை, 2015
100* அம்பட்டி ராயுடு, புணே, 2018

* இதற்கு முன்பு இந்த ஐந்து வீரர்களும் ஐபிஎல்-லில் எந்த வருடமும் 400 ரன்களைக் கூட தாண்டியதில்லை. ஆனால் இந்தமுறை 500 ரன்களுக்கு மேல் எடுத்து அசத்தியுள்ளார்கள்.

ரிஷப் பண்ட் 582 ரன்கள்
கேன் வில்லியம்சன் 544 ரன்கள்
கேஎல் ராகுல் 537 ரன்கள்
அம்பட்டி ராயுடு 535 ரன்கள்
ஜோஸ் பட்லர் 509 ரன்கள்

2018 ஐபிஎல்-லில் சதமடித்த வீரர்களின் வயது

கிறிஸ் கெயில் - 38 வருடம் 210 நாள்கள்
ஷேன் வாட்சன் - 36 வருடம் 307 நாள்கள்
ரிஷப் பண்ட் - 20 வருடம் 218 நாள்கள்
அம்பட்டி ராயுடு - 32 வருடம் 232 நாள்கள்

* முதல்முறையாக ஐபிஎல்-லில் ஒரே வருடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சதங்களை அடித்துள்ளார்கள் சிஎஸ்கே வீரர்கள். இந்த வருடம் வாட்சன் (106 ரன்கள்), ராயுடு (100 ரன்கள்) ஆகிய சிஎஸ்கே வீரர்கள் சதமெடுத்துள்ளார்கள். 

ஹைதராபாத்துக்கு (சன்ரைசர்ஸ்) எதிராக அதிக ரன்கள் எடுத்த கூட்டணி

157 - கோலி/டிவில்லியர்ஸ்
134 - வாட்சன்/ராயுடு
133 - ஹஸ்ஸி/ரெய்னா
130 - சிம்மன்ஸ்/ராயுடு

ஹைதராபாத்துக்கு (சன்ரைசர்ஸ்) எதிராக அதிகமுறை 100 ரன்கள் கூட்டணி எடுத்த அணி

4 தடவை - சென்னை
2 தடவை - பெங்களூர்/மும்பை
1 தடவை - குஜராத்

2018 ஐபிஎல்-லில் ஹைதராபாத் முதலில் பேட் செய்தபோது...

118 ரன்கள் - வெற்றி
132 ரன்கள் - வெற்றி
146 ரன்கள் - வெற்றி
151 ரன்கள் - வெற்றி
179 ரன்கள் - தோல்வி

ஐபிஎல் போட்டியில் சதமெடுத்த இந்தியர்கள் (14 பேர்)

மணீஷ் பாண்டே, யூசுப் பதான், முரளி விஜய், வல்தாட்டி, டெண்டுல்கர், சேவாக், ரஹானே, ரோஹித் சர்மா, ரெய்னா, சாஹா, கோலி, சாம்சன், ரிஷப் பந்த், அம்பட்டி ராயுடு.

2018 ஐபிஎல்-லில் அம்பட்டி ராயுடு

535 ரன்கள், அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் நான்காம் இடம்.
ஒரு சதம், இரு அரை சதங்கள்.
29 சிக்ஸர்கள், 48 பவுண்டரிகள்
ஸ்டிரைக் ரேட் - 152.85.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com