கோலி அணிக்கு பிளேஆஃப் வாய்ப்புகள் இன்னமும் உள்ளதா?

தற்போது பெங்களூர் அணியின் நெட்ரன்ரேட் +0.218. அதாவது -0.261 என இருந்ததை ஒரே ஆட்டத்தில்..
கோலி அணிக்கு பிளேஆஃப் வாய்ப்புகள் இன்னமும் உள்ளதா?

மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பஞ்சாப் - பெங்களூர் இடையேயான ஐபிஎல் ஆட்டம் கோலி அணிக்குச் சாதகமாக முடிந்துவிட்டது.

டாஸ் வென்ற விராட் கோலி, பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக பஞ்சாப் அணி, 15.1 ஓவர்களில் 88 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. உமேஷ் யாதவ் அற்புதமாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த எளிதான இலக்கை 8.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி அடைந்தது பெங்களூர் அணி. 

12 ஆட்டங்களில் 5 வெற்றிகளை அடைந்துள்ள பெங்களூர் அணி, 10 புள்ளிகளுடன் 7-ம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் அடுத்த இரு ஆட்டங்களையும் வென்றாலும் கூட பெங்களூர் அணியால் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறமுடியுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

முடியும். ஆனால் அதற்குச் சாதகமாக சில முடிவுகள் அமையவேண்டும். 

தற்போது பெங்களூர் அணியின் நெட்ரன்ரேட் +0.218. அதாவது -0.261 என இருந்ததை ஒரே ஆட்டத்தில் மாற்றிவிட்டது. இதை அப்படியே வைத்துக்கொண்டு 14 புள்ளிகளை அடைந்தால் பிளேஆஃப்-புக்குள் செல்ல நல்ல வாய்ப்புகள் உருவாகும்.

ஆனால், பஞ்சாப்பும் கொல்கத்தா அல்லது ராஜஸ்தான் ஆகிய இரு அணிகளில் ஒன்றும் மீதமுள்ள எல்லா ஆட்டங்களையும் வென்றால் பெங்களூர் அணியால் பிளேஆஃப்-புக்குள் செல்லமுடியாது. ஏனெனில் மீதமுள்ள ஆட்டங்களை வென்றுவிட்டால் பஞ்சாப்பும் கொல்கத்தா அல்லது ராஜஸ்தானும் தங்கள் கையில் 16 புள்ளிகளை வைத்திருப்பார்கள். கடைசி இரு இடங்களையும் இந்த அணிகள் எடுத்துக்கொள்ளும். பெங்களூர் வெளியேற வேண்டியதுதான்.

எனினும் பெங்களூர் உள்ளிட்ட நான்கு அணிகள் 12 புள்ளிகள் வைத்திருந்தாலும் நெட்ரன்ரேட் அடிப்படையில் கோலி அணியால் பிளேஆஃப்-புக்குள் நுழைய முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com