காங்கிரஸ் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முதல் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.

உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முதல் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
இதில் மதுரை, தூத்துக்குடி மாநகராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் போட்டியிடுகிறது.
மதுரை மாநகராட்சியில் திமுகவால் ஒதுக்கப்பட்ட 8 வார்டுகளுக்கும், தூத்துக்குடி மாநகராட்சியில் ஒதுக்கப்பட்ட 7 வார்டுகளுக்கும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாநராட்சி: வேட்பாளர் பெயர் -வார்டு எண் (அடைப்புக்குறிக்குள்):
டாக்டர் ஆர்.ரவிச்சந்திரன் (வார்டு 7), ஆர்.சுரேஷ் பாபு (வார்டு 9), எம்.ராஜேஷ்வரி (வார்டு 12), எஸ்.ஐ.டி. பால்ராஜ் (வார்டு 40), டி.சந்தோஷம் (வார்டு 56), டி.டி.சுஜாதா தாமோதரன் (வார்டு 74), கே.பி.எஸ்.அறிவுச்செல்வி (வார்டு 75), ஜி.ஞான செளந்தரி (வார்டு 97).
தூத்துக்குடி மாநகராட்சி: வேட்பாளர் - வார்டு எண்: சேகர் (வார்டு 6), சாந்தி (வார்டு 25), சந்திரபோஸ் (வார்டு 35), முத்து விஜயா (வார்டு 39), தனலட்சுமி (வார்டு 50), லதா மணிசெல்வி (வார்டு 58), ஜெயக்குமார்
(வார்டு 59).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com