பூண்டி ஏரியை வந்தடைந்தது கிருஷ்ணா நதி நீர்

செவ்வாய்க்கிழமை மாலை தமிழக எல்லையான ஜீரோ பாயின்டை வந்தடைந்த தண்ணீர் வியாழக்கிழமை அதிகாலை பூண்டி ஏரியை வந்தடைந்தது.
பூண்டி ஏரியை வந்தடைந்தது கிருஷ்ணா நதி நீர்

திருவள்ளூர்: செவ்வாய்க்கிழமை மாலை தமிழக எல்லையான ஜீரோ பாயின்டை வந்தடைந்த தண்ணீர் வியாழக்கிழமை அதிகாலை பூண்டி ஏரியை வந்தடைந்தது.

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டதன் பேரில் கடந்த 10-ம் தேதி ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் வினாடிக்கு 200 கன அடியாக திறக்கப்பட்டது.  அதை தொடர்ந்து கிருஷ்ணா நீர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வினாடிக்கு 600 கன அடியாக உயர்த்தப்பட்டது.

அந்த தண்ணீர் கிருஷ்ணா கால்வாய் வழியாக ராப்பூர், வெங்கடகிரி, காளஹஸ்தி, வரதயபாளையம், சத்தியவேடு வழியாக, 152 கிலோ மீட்டர் துôரத்தை கடந்து, செவ்வாய்க்கிழமை மாலை மணிக்கு தமிழக எல்லையான தாமரைக்குப்பத்தில் உள்ள ஜீரோ பாயின்டை வந்தடைந்தது.

அங்கிருந்து ஒதப்பை, ஆட்டரம்பாக்கம், மயிலாப்பூர் வழியாக உள்ள இணைப்புக் கால்வாய் வழியாக 24 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் பூண்டி ஏரியை வந்தடைந்தது கிருஷ்ணா நதிநீர்.

வியாழக்கிழமை காலை நிலவரப்படி பூண்டி ஏரியில் மொத்தமுள்ள 3,231 மில்லியன் கன அடியில் , 93 மில்லியன் கன அடி நீர் உள்ளது. தற்போது இணைப்பு கால்வாய் மூலம் வினாடிக்கு, 39 கன அடியும், பேபி கால்வாயில், 25 அடியுமாக சேர்ந்து, மொத்தம் 64 கன அடி நீர் சென்னை புழல் ஏரிக்கு அனுப்பப்படுகிறது.

கிருஷ்ணா நீர்வரத்தால், அடுத்த சில தினங்களில் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com