சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு ஒவ்வாமை ஏற்பட்டு சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திமுக தலைமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், திமுக தலைவர் கருணாநிதிக்கு ஒவ்வாமை ஏற்பட்டு சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக உட்கொண்டு வரும் மருந்துகளில் ஒன்று அவரது உடலுக்கு ஒத்துக் கொள்ளாததால் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் மேலும் சில நாட்கள் ஓய்வெடுக்க கருணாநிதியை கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
எனவே, பார்வையாளர்கள் கருணாநிதியைக் காண வருவதை தவிர்த்து, ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.