சுற்றுலா வந்த சென்னை தம்பதியைத் தாக்கிய காட்டெருமை

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை காட்டெருமை தாக்கியதில், சென்னையைச் சேர்ந்த தம்பதி பலத்த

குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை காட்டெருமை தாக்கியதில், சென்னையைச் சேர்ந்த தம்பதி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  நீலகிரி மாவட்டம், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தற்போது, அதிகாலையிலேயே சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுகிறது. இந்நிலையில், காலையில் சிம்ஸ் பூங்கா திறக்கப்பட்டதும், சென்னையைச் சேர்ந்த தம்பதி தினேஷ், தாமரை ஆகியோர், பிற சுற்றுலாப் பயணிகளுடன் சேர்ந்து இயற்கை அழகை ரசித்தவாறு புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.
 அப்போது, புதர் மறைவில் இருந்து திடீரென வெளியேறிய காட்டெருமை, தாமரையைத் தாக்கியது. மனைவியைக் காப்பாற்ற முயன்ற தினேஷும் காட்டெருமை யால் தாக்கப்பட்டார். பூங்கா ஊழியர்கள், சுற்றுலாப் பயணிகள் சேர்ந்து காட்டெரு மையை விரட்டிவிட்டு, இத்தம்பதியை, இங்குள்ள அரசு லாலி மருத்துவமனையில் சேர்த்தனர்.
 சமீபகாலமாக குன்னூர் பகுதி சாலைகள், பூங்காக்கள், குடியிருப்புப் பகுதிகளில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், உள்ளூர்வாசிகளும், சுற்றுலாப் பயணிகளும் அச்சமடைந்துள்ளனர்.
 எனவே, சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் இடங்களில் வனத் துறையினரும், தோட்டக்கலை துறையினரும் தடுப்பு வேலிகள் அமைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com