பறவைக் காய்ச்சல் எதிரொலி: கோழிப் பண்ணைகளில் தடுப்பு நடவடிக்கைகள்

பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், நாமக்கல் கோழிப் பண்ணைகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நல்லிபாளையம் பகுதியில் பண்ணையில் நோய் தடுப்பு மருந்து தெளித்த ஊழியர்.
நல்லிபாளையம் பகுதியில் பண்ணையில் நோய் தடுப்பு மருந்து தெளித்த ஊழியர்.

பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், நாமக்கல் கோழிப் பண்ணைகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

புது தில்லி, கேரளம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனிடையே, அண்டை மாநிலமான கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பரவியிருப்பது நாமக்கல் மண்டலத்தில் அச்சத்தை உண்டாக்கியுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் 700-க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. 5 கோடிக்கும் அதிகமான கோழிகள் இங்கு வளர்க்கப்படுகின்றன.

தினமும் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கேரள மாநிலத்துக்கு மட்டும் தினமும் சுமார் 1 கோடி முட்டை நாமக்கல்லில் இருந்து அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால், ஆலப்புழை பகுதியில் பறவைக் காய்ச்சல் நோய் கண்டறியப்பட்டு இருப்பதால், தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் முட்டை விற்பனை கேரளத்தில் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. தற்போது கால்நடைத் துறையினரிடம் இருந்து சான்றிதழ் பெற்று வரும், முட்டை லாரிகளுக்கு மட்டுமே கேரளத்தில் அனுமதி அளிக்கப்படுகிறது. இதனிடையே, 3 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் எதிரொலியால், நாமக்கல் பண்ணையாளர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பண்ணைகளில் வெளியாட்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோழித் தீவனம் கொண்டு வரப்படும் வாகனங்களில் கிருமி நாசினி மருந்து தெளித்த பிறகே பண்ணைகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 12 கால்நடை மருத்துவர்கள் தலைமையில் அதிவிரைவுப் படை அமைக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com