உணவுப் பாதுகாப்புச் சட்டம் ஏற்பு: அரசுக்கு பாமக கண்டனம்

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகம் நகரமயமாக்கப்பட்ட மாநிலம் என்பதால் மத்திய அரசின் திட்டப்படி 50.55 சதவீத மக்களுக்கு மட்டுமே உணவு தானியங்களை வழங்க முடியும். அதனால்தான் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இந்தத் திட்டத்தில் நவம்பர் 1 முதல் இணைவதாக தமிழக அரசு அறிவித்திருப்பதன் காரணத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
திட்டத்தை ஏற்றுக் கொள்ளாத மாநிலங்களில், வறுமைக் கோட்டுக்கு மேல் வாழ்வோருக்கான அரிசி விலையை கிலோ ரூ.8.30-லிருந்து, ரூ.22.54 ஆக மத்திய அரசு உயர்த்தியது. நிபந்தனைகளை ஏற்று திட்டத்தில் இணையும்படி மத்திய அரசு அழுத்தம் கொடுத்ததாகவும், அதற்கு பணிந்துதான் இத்திட்டத்தில் தமிழக அரசு இணைந்ததாகவும் கூறப்படுகிறது.
இனி உணவு சார்ந்த விஷயங்களில் முடிவெடுக்கும் அதிகாரம்- உரிமையை மத்திய அரசிடம் தமிழக அரசு தாரை வார்த்துள்ளது. இந்தத் துரோகத்தை எதிர்த்து தமிழக அரசு போராடியிருக்க வேண்டுமே தவிர, பணிந்து போயிருக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com