கல்லாறு வனப் பகுதியில் அரியவகை வண்ணத்துப் பூச்சி

மேட்டுப்பாளையத்தை அடுத்த கல்லாறு வனப் பகுதியில் "ஆர்கிட்' வகையைச் சேர்ந்த சிறிய வண்ணத்துப் பூச்சி கண்டுபிடிக்கப்பட்டது.
கல்லாறு வனப்பகுதியில் கண்டறியப்பட்ட "ஆர்கிட்" வகையைச் சேர்ந்த சிறிய அளவு வண்ணத்துப் பூச்சி.
கல்லாறு வனப்பகுதியில் கண்டறியப்பட்ட "ஆர்கிட்" வகையைச் சேர்ந்த சிறிய அளவு வண்ணத்துப் பூச்சி.

மேட்டுப்பாளையத்தை அடுத்த கல்லாறு வனப் பகுதியில் "ஆர்கிட்' வகையைச் சேர்ந்த சிறிய வண்ணத்துப் பூச்சி கண்டுபிடிக்கப்பட்டது.
மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் செல்லும் மலைப்பாதையில் அமைந்துள்ள கல்லாறு வனப்பகுதி. நீலகிரி மலையடிவாரத்தில் அரிய வகை தாவரங்களையும், பறவைகளையும், பூச்சி வகைகளையும் கொண்ட இந்த வனப்பகுதிக்கு, வன ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினரும் ஆய்வுக்காக வருவது வழக்கம்.
இந்த நிலையில், நீலகிரி மற்றும் ராஜபாளையம் பகுதி வண்ணத்துப் பூச்சி சங்கங்களைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் கொண்ட குழு வண்ணத்துப் பூச்சிகளைத் தேடி கல்லாறு வனப்பகுதிக்குள் கடந்த திங்கள்கிழமை சென்றது.
அப்போது, வனப்பகுதியில் மிக அரிதாகந்க் காணப்படும் சிறிய வகை ஆர்கிட் வண்ணத்துப் பூச்சியை குழுவினர் கண்டு வியப்படைந்தனர்.
இதுகுறித்து ராஜபாளையம் சந்தோஷ் கூறியதாவது:
ஆர்கிட் வகை செடி என்பது உயரமான மரங்களின் மேலே ஒட்டுண்ணியாக படர்ந்து வாழும் தன்மை கொண்டது. அதேபோல ஆர்கிட் வகையைச் சேர்ந்த இந்த அரிய வகை வண்ணத்துப் பூச்சியும் உயரமான மரங்களின் மேற்பகுதியில் ஆர்கிட் மலர் வளரும் பகுதியில் வாழும் தன்மை கொண்டது.
இந்த சிறிய வகை வண்ணத்துப் பூச்சியின் இறகு 24 மி.மீ. முதல் 27 மி.மீ அளவு நீளம் கொண்டது. ஆண் வண்ணத்துப் பூச்சி வெளிர் நீலம் மற்றும் கருப்பு கலந்த வண்ணத்திலும், பெண் வண்ணத்துப் பூச்சி பழுப்பு, வெள்ளையும் கலந்த வண்ணத்திலும் காணப்படும்.
தமிழகத்தில் முதல்முதலாக திருநெல்வேலி மாவட்டத்தில் கேரள வன எல்லையருகே இந்த வண்ணத்துப் பூச்சி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கல்லாறு வனப்பகுதியில் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com